டாக்டர் பட நடிகையுடன் இணைந்த ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் – வைரலாகும் வீடியோ!

0
டாக்டர் பட நடிகையுடன் இணைந்த 'கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியன் - வைரலாகும் வீடியோ!
டாக்டர் பட நடிகையுடன் இணைந்த 'கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியன் - வைரலாகும் வீடியோ!
டாக்டர் பட நடிகையுடன் இணைந்த ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினி ஹரிப்ரியன், ‘டாக்டர்’ திரைப்பட நடிகை ப்ரியங்கா அருள் மோகனுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று வலைதளங்களில் மீண்டுமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நடிகை ரோஷினி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ வில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வெற்றி, தோல்வியில் பங்கேற்று வந்த நடிகை ரோஷினி இந்த தொடரில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்திருந்தது.

அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் கண்ணம்மா, அடியாட்களுடன் சண்டையிடும் அகில் – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

என்றாலும் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். இப்படி இருக்க திரைப்பட வாய்ப்புக்காக ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் இருந்து விலகிய நடிகை ரோஷினி தற்போது வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறாராம். ஆனால் அவர் திரைப்படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இப்படி இருக்க சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி இருந்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் நடிகை ப்ரியங்கா அருள் மோகனுடன், நடிகை ரோஷினி இருப்பது போல வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை ப்ரியங்கா அருள் மோகன் மற்றும் ரோஷினி இருவரும் சேர்ந்து செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், அந்த வீடியோ மீண்டுமாக பகிரப்பட்டு வருகிறது.

‘கோபி தன்னோட வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாரு’ – ரோஜா முதல் பாக்கியலட்சுமி வரை சீரியல்களின் கமெண்ட்ஸ்!

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் நடிகை ப்ரியங்கா அருள் மோகனின் திரைப்படத்தில் ரோஷினி நடித்து வருகிறாரா என சந்தேகங்களை கிளப்பியுள்ளனர். இப்போது நடிகை ப்ரியங்கா, சிவகார்த்திக்கேயனுடன் ‘டான்’ மற்றும் சூர்யாவுடன்’ எதற்கும் துணிந்தவன்’ அகத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here