‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட, ரோஷினி மீண்டும் கண்ணம்மாவாக வருகிறாரா என்றதொரு குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

நடிகை ரோஷினி

சமீப காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சற்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வர இருவருக்கும் இடையே சில ஸ்வாரசியமான சம்பவங்கள் நடைபெறுகிறது. அதாவது, இதுவரை சண்டையிட்டு வந்த பாரதி, கண்ணம்மா இருவருக்கும் இடையே தற்போது சில ரொமான்டிக் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது கலகலப்பாக போய் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் புதிதாக நடித்து வரும் நடிகை வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள துவங்கி உள்ளனர். இருந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினியை மிஸ் செய்து வரும் ரசிகர்கள் இந்த காட்சிகளில் ரோஷினி நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என அவ்வப்போது குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் இருந்து விலகின பின்பாக, அதற்காக வருத்தம் தெரிவித்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன், ரசிகர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – தனம் சுஜிதா வெளியிட்ட புகைப்படம்!

இதையடுத்து மீண்டுமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்ட நடிகை ரோஷினி ‘வாழ்க்கை எளிதாகவோ அல்லது மன்னிக்கக்கூடியதாகவோ இருக்காது. ஆனால் நாம் வலிமையடைவோம், நெகிழ்ச்சியடைவோம்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது சினிமா வாய்ப்புக்காக சீரியலை விட்டு விலகி இருக்கும் நடிகை ரோஷினி இப்படி ஒரு பதிவை வெளியிட அவர் மீண்டுமாக சீரியலுக்கு வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here