‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியா இது? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியா இது? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகிய ரோஷினியா இது? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியா இது? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து தற்போது விலகியுள்ள நிலையில், புதிய ஷூட் ஒன்றிற்காக ரெடியாகும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்ணம்மாவா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரோஷினி ஹரிப்ரியன்:

பாரதி கண்ணம்மா தொடரில் இதுவரை சீரியல்களில் இல்லாத வகையில் புது விதமாக கதைக்களம் உருவாக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினார்கள். அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களின் பேவரிட் தொடராக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா கதாபாத்திரமும், அதை சிறப்பாக செய்து வந்த ரோஷினியும் தான். கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு மிகவும் கனக்கச்சிதமாக பொருந்தியவர் ரோஷினி. ரோஷினியின் மூலமாக கண்ணம்மா கதாபாத்திரமும், கண்ணம்மா கதாபாத்திரம் மூலம் ரோஷினியும் மக்கள் மத்தியில் நல்ல புகழை அடைந்தனர்.

கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” ஆல்யாவிற்கு மாமியார் கொடுத்த பரிசு – ட்ரெண்டான வீடியோ!

இந்நிலையில், திடீரென்று ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கண்ணம்மா ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி தான் தொடர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தனக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைத்திருப்பதால் பாரதி கண்ணம்மா தொடரில் நிலைக்க முடியாது என்று ரோஷினி வருத்தத்தை தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் ரோஷினியை வெள்ளித்திரையில் காணப்போகும் சந்தோஷத்தில் அதை ஒத்துக் கொண்டனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விடுமுறை எடுத்த ஹீரோ அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

ரோஷினி தற்போது புதிய ஷூட்டிங் ஒன்றிற்காக தயாராவது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்காக ரோஷினி வித்தியாசமாக மேக்கப் செய்து ஆளே அடையாளம் தெரியாமல் உள்ளார். இதனால் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்ணம்மா வேடத்தில் நடித்த ரோஷினியா இது என்று மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரோஷினியின் புது கெட்டப்பிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!