கர்ப்பமான கண்ணம்மாவுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாரதி – ரசிகர்கள் உற்சாகம்!

0
கர்ப்பமான கண்ணம்மாவுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாரதி - ரசிகர்கள் உற்சாகம்!
கர்ப்பமான கண்ணம்மாவுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாரதி - ரசிகர்கள் உற்சாகம்!
கர்ப்பமான கண்ணம்மாவுடன் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாரதி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி & கண்ணம்மாவின் திருமண நாள் கொண்டாட்டம் நடக்க உள்ள நிலையில், அவர்களின் முந்தைய நாட்களை நினைத்து பார்க்கின்றனர். இது பற்றிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

திருமண நாள் கொண்டாட்டம்:

பாரதி கண்ணம்மா சீரியலில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் பாரதி கண்ணம்மா மீது வைத்திருக்கும் சந்தேக கண்ணோட்டத்தினால் தான் மாறுகிறது. தனக்கு குழந்தை பிறக்காது என்ற போலியான ரிப்போர்ட்டை நம்பி மருத்துவரான பாரதி தன் மனைவி கண்ணம்மா கர்ப்பமாக இருப்பதை சந்தேகிக்கிறார். இதனால் அவரை நோகடிக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்ணம்மா தன் கணவன் பாரதியை விட்டு பிரிகிறார். அதற்கு முன்னாள் வரை இவர்கள் மிகவும் அந்நியோன்யமாகவும், பாசமாகவும் தான் இருந்து வந்தனர்.

நெட்டிசன்களிடம் சிக்கிய சன் டிவி “ரோஜா” சீரியல் – நியாயம் இல்லாத காட்சிகள்! வைரலாகும் மீம்ஸ்!

பாரதி கண்ணம்மாவை பார்த்துக் கொள்வதை பார்த்து சௌந்தர்யாவே ஆச்சர்யபடுவார். ஆனால் சந்தேகம் எழுந்ததும் பாசம் அனைத்தும் போய் வெறுப்பாக மாறி விட்டது. இந்நிலையில் தற்போது இவர்களின் 10வது திருமண நாள் வருகிறது. இதற்காக அனைவர்க்கும் புது டிரஸ் எடுக்கிறார்கள். அதே நாளில் வீட்டில் பூஜை நடக்கிறது. அஞ்சலியின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடக்கிறது. இதனால் வரும் எபிசோடுகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது பாரதியும், கண்ணம்மாவும் தங்களின் வாழ்வில் முன்னதாக நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்கிறார்கள்.

யார் இந்த ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி? முழு தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!

இவர்கள் சந்தோசமாக இருக்கும் சமயத்தில் கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் போது வந்த திருமண நாள் நினைவுக்கு வருகிறது. அதில், வீடு முழுவதும் அழகாக அலங்கரித்து, பாடல் பாடும் நபர்கள் வந்து இவர்களுக்கு பிடித்த பாடல்களை படுவது போல் பாரதி கண்ணம்மாவிற்கு சர்பிரைஸ் கொடுக்கிறார். இது தவிர மற்றொரு சர்பிரைஸ் ஆக கண்ணம்மாவிற்கு மோதிரம் அணிவித்து விடுகிறார். இதனால் கண்ணம்மா மிகவும் சந்தோசப்படுவது போல் உள்ள ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here