விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமியிடம் உண்மையை சொல்லப்போகும் பாரதி – அடுத்த ட்விஸ்டு!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் லட்சுமியிடம் உண்மையை சொல்லப்போகும் பாரதி - அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் லட்சுமியிடம் உண்மையை சொல்லப்போகும் பாரதி - அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமியிடம் உண்மையை சொல்லப்போகும் பாரதி – அடுத்த ட்விஸ்டு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது கண்ணம்மாவின் பிறந்த நாளுக்கு வந்திருக்கும் பாரதி, லட்சுமியிடம் அவரது அப்பா யார் என்கிற உண்மையை சொல்லப்போவது போல சில காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமிக்கு அவரது அப்பா யார் என்கிற விவரம் எப்போது தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதாவது, கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவில் லட்சுமியின் அப்பா யார் என்கிற உண்மையை அவருக்கு சொல்வதாக கண்ணம்மா கூறி இருக்கிறார். இதனால் பல நாட்களாக அப்பாவை பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து வரும் லட்சுமி, அவருக்காக கோலம் போட்டு, வெல்கம் செய்வது போல பல படங்களை வரைந்து வீடு முழுவதும் ஒட்டி வைத்திருக்கிறார்.

பாரதி தான் அப்பா என்ற உண்மையை சொன்ன கண்ணம்மா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் புதிய ட்விஸ்ட்!

இதற்கு மத்தியில் பாரதியை தனது பிறந்தநாள் விழாவுக்காக கண்ணம்மா அழைக்க அவரோ முதலில் மறுத்து விட்டு பிறகு வெண்பாவுடன் விழாவுக்கு வந்து சேருகிறார். ஆனால் லட்சுமியின் அப்பா பாரதி என்று கண்ணம்மா சொன்னால், வருண் தான் லட்சுமிக்கு அப்பா என்ற உண்மையை சொல்லிவிடுவதாக மிரட்டுகிறார் பாரதி. இதனால் செய்வதறியாமல் விக்கித்து கொண்டிருக்கிறார் கண்ணம்மா. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் லட்சுமி வழக்கம் போல தனது அப்பா யார் என்று கேட்க, கண்ணம்மா பாரதியை கை காட்டி அவர் தான் உன் அப்பா என்று கூறுகிறார்.

விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரும் கோபி? பாக்கியாவின் முடிவு என்ன? ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

ஆனால், அதை மறுக்கும் பாரதி உன் அப்பா நான் இல்லை, அவரது போட்டோவை காட்டுகிறேன் என்று கூறி வருணின் புகைப்படத்தை காட்ட எடுக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் இடம்பிடித்திருக்க இது குறித்த வீடியோ கிளிப் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காட்சிகளுக்கு, தப்பு மேல தப்பு பண்ணுகிற பாரதி, உனக்கு ஒரு DNA டெஸ்ட் எடுத்தால் என்ன, பாரதி எப்போது தான் உண்மையை புரிந்து கொள்ள போகிறார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!