பிறந்தநாளில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா, ஹேமாவை பற்றிய உண்மையை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

0
பிறந்தநாளில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா, ஹேமாவை பற்றிய உண்மையை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
பிறந்தநாளில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா, ஹேமாவை பற்றிய உண்மையை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!
பிறந்தநாளில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா, ஹேமாவை பற்றிய உண்மையை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த 2 வாரங்களாக அனைவரும் காத்திருந்த கண்ணம்மாவின் பிறந்தா நாளும் வந்து விட்டது. அன்று ஹேமாவை பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல இருப்பதாக கண்ணம்மா முடிவு செய்துள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிறந்த நாள் விழா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கணவர் பற்றிய பேச்சு ஆட்டோ குமாரின் தங்கைக்கு நடந்த நிச்சயதார்த்தத்தில் எழ, தன் குழந்தைக்கு அப்பா யார் என்பதை வர போகும் தன் பிறந்த நாள் விழாவில் சொல்ல இருப்பதாக கண்ணம்மா அனைவரிடமும் சொல்கிறார். இது பற்றி அறிந்ததும் சௌந்தர்யா, பாரதி உட்பட அனைவரும் மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர். லட்சுமி தன் அப்பா வர இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக பல ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திட்ட பாக்கியா!

இதனால் கண்ணம்மாவிற்கு பதற்றம் அதிகமாகிறது. லக்ஷ்மியை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற கூடாது என்று நினைத்து பாரதியை எப்படியாவது தன் பிறந்த நாள் விழாவிற்கு வரவழைக்க முயற்சி செய்கிறார். பல முறை அழைத்தும் பாரதி தான் வர மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இப்படியே நாட்கள் செல்ல கண்ணம்மாவின் பிறந்த நாளும் வந்து விட்டது. தன் பிறந்த நாள் அன்று சௌந்தர்யா, வேணுவிடம் ஆசீர்வாதம் வாங்க கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு வருகிறாள். பாரதி எங்கு இருக்கிறார் என்று கேட்க, ஹாஸ்பிடலில் தான் இருப்பதாக அகில் சொல்லி விடுகிறார்.

உயிருக்கு ஆபத்தான இறுதி நிமிடங்களில் கோதை, அதிர்ச்சியில் தமிழும் சரஸ்வதியும் – ப்ரோமோ ரிலீஸ்!

வரும் வழியிலேயே வெண்பா கண்ணம்மாவை பார்த்து எதுக்கு இங்க வந்த என்று கேட்க, புருஷன் பொண்டாட்டிக்கு ஆயிரம் இருக்கும் உனக்கு என்ன என்று சொல்லி விட்டு சென்று விடுகிறாள். பாரதி எதுக்கு வந்த என்று கேட்கிறார். அதற்கு நீங்க கண்டிப்பா பிறந்த நாள் விழாவிற்கு வர வேண்டும் என்றும், மறுத்த பாரதியிடம், இன்று நீங்கள் எதிர்பார்க்காத ரகசியத்தை சொல்லப்போவதாக சொல்கிறாள். மனதிற்குள், ஹேமாவும் நம்ம குழந்தை தான் என்ற உண்மையை சொல்ல போவதாக நினைத்து கொள்கிறாள் கண்ணம்மா. இதனால் இன்றைய எபிசோடிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!