கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு – ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

0
கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு - 'பாரதி கண்ணம்மா' எபிசோட்!
கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு - 'பாரதி கண்ணம்மா' எபிசோட்!
கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு – ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுடன் தங்கி இருக்கும் பாரதி தற்போது குடித்து விட்டு வந்து கண்ணம்மாவிடம் தகராறு செய்வது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் சில ஸ்வாரசியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 660 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் துவங்கப்பட்ட இத்தொடர் ஆரம்பம் முதலே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. இதற்கிடையில் முக்கிய நடிகர், நடிகைகள் மாற்றம் உள்ளிட்ட சில ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

திடீரென நிறுத்தப்பட்ட ஜீ தமிழ் & விஜய் டிவி சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இப்படி இருக்க பல மாதங்களுக்கு பின்பாக தற்போது பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வரும் இந்த சீரியலூக்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது கண்ணம்மா வீட்டில் தங்கி இருக்கும் பாரதி, அங்கிருந்து எப்படியாவது கிளம்பி விட வேண்டும் என்ற திட்டத்துடன் கண்ணம்மாவுக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து வருகிறார். அதற்காக தற்போது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் பாரதி, அதை கேட்க நீ யார் என கண்ணம்மாவிடம் வம்பு செய்கிறார்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலிக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!

இப்போது சௌந்தர்யாவுக்கு போன் செய்யும் பாரதி, கண்ணம்மா தன்னை கேள்வி கேட்பதாக குற்றம் சொல்ல வழக்கம் போல கண்ணம்மாவுக்கு சப்போர்ட் செய்யும் சௌந்தர்யா, உன்னை கேள்வி கேட்க அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என கூறி பாரதியை வெறுப்பேற்றுகிறார். போதையில் இருக்கும் பாரதி, வாந்தி பண்ண அவரை அழைத்து கொண்டு போய் தூங்க வைக்கிறார் கண்ணம்மா. பிறகு பாரதி செய்த சேட்டைகளை பார்க்கும் கண்ணம்மா குடித்து விட்டு வாந்தி எடுக்கிறீயா, அதை உன்னையவே கழுவ வைக்கிறேன் என நினைப்பது போல அடுத்தகட்ட எபிசோடு வெளியாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!