கண்ணம்மாவிற்கு பாரதியின் கண்டிஷன் லட்சுமியா? கடுப்பான ரசிகர்கள்! அடுத்து வர இருக்கும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வது போல ப்ரோமோ வெளியானாலும், சீரியலில் 2 நாட்களில் என ட்விஸ்ட் வைத்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் அபிமான சீரியல் ஆகும். இந்த சீரியலில் கதாநாயகி ரோஷினி விலகிய நிலையில் TRP வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைத்து கதையில் திருப்பங்கள் கொண்டு வந்ததால் சீரியல் TRP மீண்டும் எகிறியது. அதன் பின் சீரியலில் பல ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் சீரியலில் 6 நாள் கதை 2 மாதங்களுக்கு ஓட்டப்பட்டது அதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இனி ‘ராஜா ராணி’ 2 சீரியலில் சந்தியாவாக சவால்களை சந்திக்கும் செம்பருத்தி ஷபானா? ப்ரோமோ ரிலீஸ்!
இடையே வெண்பா வந்தாலும் அவரை தற்போது வரை செல்லா காசாக மாற்றி இருக்கிறார் இயக்குனர். இப்படியே கதை போக, இந்த வார தொடக்கத்தில் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்வது போல காட்டப்பட்டு இன்னும் 5 நாட்களில் என்ற ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. அதனால் விறுவிறுப்பு அதிகரிக்கும் என நினைத்தால் பாரதி பேசும் வசனங்களை பார்த்தால் கண்டிப்பாக பாரதி மீண்டும் நடிக்க தான் செய்கிறார் என நினைக்க தோன்றுகிறது.
“குக் வித் கோமாளி 3” முதல் வாரத்தில் ரோஷினிக்கு வந்த கோமாளி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது வெளியான ப்ரோமோவில் இன்னும் இரண்டு நாட்களில் என மீண்டும் ட்விஸ்ட் வைத்து இருக்கின்றனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் அது என்ன ட்விஸ்ட்டாக இருக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் சில சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியின் படி பாரதி லக்ஷ்மி என்னுடைய மகள் இல்லை. நீ தவறாக இருந்து தான் குழந்தை பெற்றுக் கொள் என ஒப்புக் கொள்ள சொல்லப்போகிறார். கண்ணம்மா அதை கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார், இருவரும் இப்போதைக்கு சேரமாட்டார்கள் என தெரிய வந்துள்ளது.