விக்ரம் வெண்பாவின் அப்பாவா? அதிர்ச்சியில் பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் திடீர் திருப்பம்!

0
விக்ரம் வெண்பாவின் அப்பாவா? அதிர்ச்சியில் பாரதி -
விக்ரம் வெண்பாவின் அப்பாவா? அதிர்ச்சியில் பாரதி - "பாரதி கண்ணம்மா" சீரியலில் திடீர் திருப்பம்!
விக்ரம் வெண்பாவின் அப்பாவா? அதிர்ச்சியில் பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவின் அம்மா ஷர்மிளாவின் எண்ட்ரியால் கதையில் பெரிய திருப்பம் வர போகிறது என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் வெண்பாவின் அப்பா தான் விக்ரம் என்ற உண்மை பாரதிக்கு தெரிய வர அவர் அதிர்ச்சி அடைய இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மா சேருவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது வெண்பாவிற்கு திருமணம் நடைபெறுமா என கதை செல்ல இருக்கிறது. வெண்பா பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என 10 ஆண்டுகளாக காத்திருக்க ஆனால் பாரதி அவரை மதிப்பதாக இல்லை. அதனால் வெண்பாவின் அம்மா திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்திருக்கிறார். ஆனால் பாரதிக்கு அந்த எண்ணமே இல்லை என தெரிந்து கொண்டு வேறு பையனை பார்க்க முடிவு செய்கிறார்.

கோலாகலமாக நடந்த ஆல்யா, சஞ்சீவ் ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாள் விழா – வைரலாகும் வீடியோ!

வெண்பா அம்மா பேச்சை மீறி எதுவும் செய்யாமல் இருக்கிறார். இந்நிலையில் சௌந்தர்யாவின் நண்பர் விக்ரம் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்து இருப்பவர் யார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அவர் வெண்பாவின் அப்பா தான் என கதை கொண்டு செல்ல இருக்கிறது. ஷர்மிளாவிற்கும் விக்ரமிற்கு பிறந்த பெண் தான் வெண்பா எனவும் ஷர்மிளா வெண்பா ஆசை முக்கியம் என்பதால் பாரதியை திருமணம் செய்ய விக்ரம் உதவியை கேட்க போகிறார்.

அப்போது விக்ரம் பாரதியிடம் வெண்பா என்னுடைய மகள் தான் அவளை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்க பாரதி அதை கேட்டு அதிர்ச்சி அடைய போகிறார். ஆனாலும் பாரதி தன்னுடைய நிலைமையை விக்ரமிடம் சொல்லி புரிய வைக்க அவர் மகளுக்காக பேசுவாரா இல்லையா என பல கேள்விகளுடன் அடுத்து வரப் போகும் எபிசோடுகள் காட்டப்பட இருக்கிறது. அதனால் இந்த வார TRPயில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here