விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்தகட்ட கதைக்களம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்தகட்ட கதைக்களம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்தகட்ட கதைக்களம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? அடுத்தகட்ட கதைக்களம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களத்தில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போலவும் அதனால் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

தற்போது அதிரடியான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் சில முக்கிய திருப்பங்களை சந்தித்துள்ளது. அதாவது, இத்தொடரில் பாரதியின் சந்தேகம் காரணமாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பிரிந்து இருந்த பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த கால கட்டத்தில் கண்ணம்மா மீது தான் போட்ட பழி பொய்யானதாக இருக்குமா என்றும் கண்ணம்மா நல்லவர் தான் என்றும் பாரதிக்குள் ஒரு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஜனவரி 21 முதல் 1-9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

இதையே தான் நாங்களும் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் சொல்லக்கூடிய அளவுக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சூப்பரான எபிசோடுகளுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கதையில் திடீர் திருப்பமாக ஒரு முக்கிய சம்பவம் அரங்கேற இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில், கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போலவும், இது குறித்து பாரதி அவரை சந்தேகப்படுவது போலவும் சில காட்சிகள் இடம்பிடித்திருந்தது.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த பிரியங்கா – குடும்பத்துடன் கோலாகல கொண்டாட்டம்!

குறிப்பாக, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதற்கு முன்னாள் நடந்தது போல கண்ணம்மாவின் கர்ப்பத்தை காரணம் காட்டி பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பிரிய இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த கதைக்களம் உண்மையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இடம்பிடித்திருக்கிறதா என்று வரும் வார எபிசோடுகள் ஒளிபரப்பானால் தான் தெரிந்து கொள்ள முடியும். என்றாலும் இந்த ப்ரோமோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!