பாரதியை வெறுப்பதாக கூறும் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பம்!

0
பாரதியை வெறுப்பதாக கூறும் வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய திருப்பம்!
பாரதியை வெறுப்பதாக கூறும் வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய திருப்பம்!
பாரதியை வெறுப்பதாக கூறும் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியை திருமணம் செய்தே தீருவேன் என ஒற்றை காலில் நிற்கும் வில்லி வெண்பா இன்றைய எபிசோடில் பாரதியை வெறுப்பதாக கூறும் சில காட்சிகள் வெளியாகி கதையில் ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் பல விதமான திருப்பங்களுடன் வெளியாகி, TRB ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் தற்போது விறுவிறுப்பு இல்லாமல் நகர்ந்து வருகிறது. இதுவரை, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமி மற்றும் ஹேமா பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் தெரிய வந்தது. பிறகு லட்சுமியையும் பாரதி ஏற்றுக்கொள்ள இப்போது எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வாழா விட்டாலும் ஒரு குடும்பமாகிவிட்டனர். அதனால், கதையில் சற்று ஸ்வாரசியம் குறைய சௌந்தர்யாவின் தோழன், வெண்பாவின் அம்மா என பல புதிய அறிமுகங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் நகர்ந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த கதைக்களத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை யாருக்கும் அடங்காமல் சுற்றித்திரிந்த வெண்பா இப்போது அம்மாவுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை கேட்டு வருகிறார். குறிப்பாக, பாரதியை விட்டு விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் செய்கிறார். இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ எபிஸோடிலும் வெண்பா, பாரதியை வெறுப்பதாக கூறும் காட்சிகள் இடம்பிடித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அடம்பிடித்து வரும் வெண்பா இப்போது அவரை வெறுப்பதாக கூறுகிறார்.

தமிழக ரேஷன் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அரசின் ஹாப்பி நியூஸ்!

அந்த வகையில் பாரதியை சந்திக்க அவரது வீட்டுக்கு வரும் வெண்பா, ‘உனக்கு எதாவது பிரச்சனை என்றால் மட்டும் நீ என்னிடம் ஓடி வருவாய். நான் உன் புலம்பலை கேட்பேன். ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ என்ன என்று கூட கேட்பதில்லை. அன்றைக்கு என்னை போலீஸ் அரெஸ்ட் செய்த போது கூட நீ வரவில்லை. பிறகு போலீஸ் ஸ்டேஷனில் வந்து கூட என்னை பார்க்கவில்லை. என் மேல் உனக்கு அக்கறை இல்லை. எனக்கு ஹெல்ப் பண்ண உனக்கு மனசில்லை. என்னை பார்த்தால் உனக்கு பைத்தியம் போல தெரிகிறதா. இப்போ சொல்றேன் பாரதி நான் உன்னை வெறுக்கிறேன்’ என்று கோபத்தில் கத்துகிறார். இப்போது விரக்தியில் பாரதியை வெறுப்பதாக கூறும் வெண்பா, இனி பாரதி மற்றும் கண்ணம்மா வாழ்க்கையில் தலையிடாமல் இருந்தால் சரி என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here