கண்ணம்மாவிடம் ஹேமாவை தர மறுக்கும் பாரதி, DNA டெஸ்ட் எடுக்க வைப்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கண்ணம்மாவிடம் ஹேமாவை தர மறுக்கும் பாரதி, DNA டெஸ்ட் எடுக்க வைப்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவிடம் ஹேமாவை தர மறுக்கும் பாரதி, DNA டெஸ்ட் எடுக்க வைப்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவிடம் ஹேமாவை தர மறுக்கும் பாரதி, DNA டெஸ்ட் எடுக்க வைப்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் தற்போது பல வித முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்ததாக ஹேமாவை தனது வீட்டிற்கு அழைத்து போக இருப்பதாக கூறுகிறார். இதனால் பாரதி மட்டுமின்றி பாரதி குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதுமே முதல் இடத்தினை தக்கவைத்திருக்கும் சீரியல் என்றால் அது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது முக்கிய திருப்பங்கள் பலவும் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மா தனக்கு பிறந்தது இரண்டு குழந்தைகள் என்று தெரிந்து கொள்ளுகிறார். தனது குழந்தை பற்றி பாரதி உட்பட அனைவரிடமும் கேட்கிறார். உண்மை தெரிந்த வேணு, அஞ்சலி, அகிலன் மற்றும் சௌந்தர்யா யாருமே ஹேமா பற்றி கூறவில்லை. இதனால் கண்ணம்மா வெண்பாவிடம் தனது குழந்தை பற்றி கேட்கிறார்.

கண்ணம்மா, சௌந்தர்யாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஹேமா – வெளியான புகைப்படங்கள்!

சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொள்ளும் வெண்பா பாரதிக்கு விவாகரத்து கொடுத்தால் தான் குழந்தை பற்றி கூறுவேன் என்று மிரட்டுகிறார். இதனை அறிந்து சௌந்தர்யா வேறு வழி இல்லாமல் ஹேமா பற்றிய உண்மைகளை கூறி விடுகிறார். இதனை கேட்டு முதலில் சந்தோஷமடையும் கண்ணம்மா பின்னர் பாரதி குடும்பத்தினர் அனைவரும் தன்னிடம் தனது குழந்தையை பற்றி இத்தனை வருடங்களாக மறைந்து இருந்ததை நினைத்து கொந்தளிக்கிறார். இனி அடுத்து கட்டமாக கண்ணம்மாவின் முடிவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

பிரசவ வலியில் துடிக்கும் தனம், உதவி செய்யும் கண்ணன் – வெளியான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!

தற்போது கண்ணம்மா ஹேமா தான் தனது குழந்தை என்று கூறி விட்டு தனது குழந்தை தன்னுடன் அழைத்து போக இருக்கிறாராம். கண்ணம்மாவின் இந்த முடிவு சௌந்தர்யா, அகிலன், அஞ்சலி மற்றும் வேணு அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்துகிறது. பாரதி தனது குழந்தையை கண்ணம்மாவிடம் அனுப்பி வைக்கவும் மறுக்கிறார். இதனால் அடுத்ததாக கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் சண்டையிட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் அனைவரும் எதிர்பார்த்திருந்த டிஎன்ஏ டெஸ்டும் கூடிய விரைவில் எடுக்கப்படுவது போல காட்சிகள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here