விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் கண்மணிக்கு திடீர் திருமணம்? ஷாக்கான ரசிகர்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் கண்மணிக்கு திடீர் திருமணம்? ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் கண்மணிக்கு திடீர் திருமணம்? ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரம் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கண்மணி மனோகரன். அவர் இன்ஸ்டாவில் திருமண கோலத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவருக்கு திருமணமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

நடிகை கண்மணி:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. முதலில் தொடக்கத்தில் பல புது முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். சீரியல் ஹீரோ ஹீரோயின் வரை அனைவரும் புது முகங்களாக களமிறங்கினர். இந்நிலையில் சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை கண்மணி மனோகரன். அவர் சீரியலில் முதலில் நெகட்டிவ் ரோலில் அறிமுகமானார். அதன் பின் அவர் கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்க தொடங்கியதற்கு பின் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

காதலர் தின கவலையில் சமந்தா, தனுஷ் – விவாகரத்தான பிரபலங்கள்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் கண்மணி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக யார் நடிக்க இருக்கிறார் என்பது தெரியாமல் இருக்கிறது. அவர் ஜீ தமிழில் “அமுதாவும்..?” என்ற சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். அதில் படிக்க முடியாமல் கஷ்டப்படும் பெண்ணாக இருக்கும் அவர் படித்த டீச்சர் ஒருவரை தான் திருமணம் செய்வேன் என குறிக்கோளுடன் இருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறுமா என்பதே கதையாக இருக்க உள்ளது.

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

அவர் நடித்த புதிய சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் கண்மணி திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதை நினைத்து வருத்தப்படுகின்றனர். இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் திருமண கோலத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த பல யூடுப் சேனல்கள் அவருக்கு திருமணம் என வதந்திகளை கிளப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை அது வெறும் போட்டோஷூட் தான் என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!