விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அஞ்சலி யார் தெரியுமா? விரைவில் வெள்ளித்திரையில் என்ட்ரி!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் கலக்கி வரும் கண்மணி மனோகரன் அவர்களின் சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திங்களில் அருண், வினுஷா, ரூபாஸ்ரீ, ரிஷி, சுகேஷ், கண்மணி மனோகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் திருப்பங்களை கொண்டதால் சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் கண்மணி சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் கண்மணி மனோகரன் நடித்து வருகிறார். முதலில் அவருடைய கதாபாத்திரம் நெகட்டிவாக காட்டப்பட்டது.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் சிபியை காண வந்த மனைவி – வெளியான 2வது ப்ரோமோ!

அதன் பின் அவர் திருந்தி விட்டார். கதையில் பல திருப்பங்கள் அஞ்சலியை சுற்றி நிகழ்ந்து வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த கண்மணி மனோகரன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். அதன் பின் மாடலிங் துறையில் களமிறங்கிய கண்மணி பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். அது மூலமாக அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தனது நடிப்பு திறமையால் கலக்கி இருக்கிறார்.

பெண் தோழியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!

அவர் சினிமாவுக்கு வரவில்லை என்றால் பேஷன் டிசைனராக ஆகியிருப்பேன் என்றும் கூறியுள்ளார். அவர் மீடியாவில் வருவதற்கு அவர்களது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அவரும் ஆதரவாக இருந்து வருகிறார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கிறது. நல்ல வாய்ப்புகள் வந்தால் விரைவில் அவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!