‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் புதிய தோற்றம் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

0
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டியின் புதிய தோற்றம் - வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டியின் புதிய தோற்றம் - வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டியின் புதிய தோற்றம் – வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவை தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்வீட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது ஸ்வாரஸ்யமும், கலகலப்புமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த பாரதியும் கண்ணம்மாவும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ துவங்கியுள்ளனர். மறுபக்கத்தில் ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக தங்களது நேரத்தை செலவிட்டு வர, அஞ்சலிக்கு இருக்கும் நெஞ்சு வலி பிரச்சனை எல்லாம் குழந்தை பிறப்பிற்கு பின்பாக சரியாக, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் புதிய பாதையில் பயணித்து வருகிறது.

தனது கணவருக்காக சமைத்து கொடுத்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வைரலாகும் வீடியோ!

இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனம் ஈர்த்திருப்பவர் நடிகை ஸ்வீட்டி. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஆரம்பத்தில் பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கும் அஞ்சலி, ஒரு கட்டத்தில் அகிலனை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் அவர் மீது வெறுப்பு காட்டும் அஞ்சலிக்கு, அகிலனின் காதல் புரிய வர அவருடன் சேர்ந்து தனது வாழ்க்கையை வாழ துவங்குகிறார்.

ஜீ தமிழில் அறிமுகமாக உள்ள புதிய சீரியல் – கதாநாயகியாக “விஜய் டிவி” சீரியல் நடிகை!

இப்போது, அஞ்சலிக்கு கண்ணம்மா மீதுள்ள மொத்த கோபம், பாசமாக மாற, அகிலனுடனான காதலிலும் ஒரு படி மேலே போய் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார். இந்த தொடரில் அஞ்சலியாக நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி நிஜத்தில் கலகலப்பான குணம் கொண்டவர். வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்வீட்டி சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அவை ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!