“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இணைந்த “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இணைந்த "பாரதி கண்ணம்மா" அருண் - வைரலாகும் புகைப்படங்கள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இணைந்த “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது புது கடை திறப்பு விழா வர இருக்கிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா அருண் கலந்து கொள்ள இருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி சீரியல்களுக்கு சின்னத்திரையில் மவுசு அதிகம் அந்த வகையில் பல டாப் சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. பாரதி கண்ணம்மா சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. இந்நிலையில் மற்றொரு டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது கடையை பல போராட்டங்களுக்கு பின் திறக்க இருக்கின்றனர்.

ராமமூர்த்திக்கு பணிவிடை செய்யும் பாக்கியா, புதிய போன் கோபிக்கு பரிசளித்த ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதற்காக குடும்பமே சந்தோஷத்தில் வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடை திறப்பு விழாவிற்கு யார் சிறப்பு விருந்தினராக வர இருக்கின்றனர் என ரசிகர்கள் இருக்கின்றனர். பொதுவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு நிகழ்ச்சிகளில் விஜய் டிவி பிரபலங்கள் வருவார்கள். அதன் படி இந்த நிகழ்ச்சிக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத் வர இருக்கிறார். இது குறித்து அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்களுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

குடும்ப பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுத்த முல்லை, கடை வளர்ச்சியை நினைத்து சந்தோசப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பொதுவாக சீரியல்களில் விறுவிறுப்பை அதிகரிக்க மகா சங்கமம் நடத்தப்படும் அதில் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்து இருப்பார்கள். அது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்களும் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்களும் இணைந்து இருக்கின்றனர். அதனால் விறுவிறுப்பு அதிகரிக்கும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!