விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மீண்டும் வரும் வெண்பா பரினா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு மீண்டும் வரும் வெண்பா பரினா - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு மீண்டும் வரும் வெண்பா பரினா - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மீண்டும் வரும் வெண்பா பரினா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது ரீஎன்ட்ரி சீரியலில் எப்போது இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

ஃபரீனாவின் ரீஎன்ட்ரி:

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அதிக விறுவிறுப்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரேட்டிங்கில் எப்போதும் போல் இப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. இதனால் ரேட்டிங்கை தக்க வைக்கும் வகையில் தற்போது சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இடையில் அதிக ரொமான்ஸ் காட்சிகள் வருகின்றது. இதனால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். கதையின் வில்லியான வெண்பா செய்யும் சூழ்ச்சியினால் பாரதி மீது சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!

இதனால் கண்ணம்மா பாரதியை விட்டு பிரிந்து தனியாக தனது குழந்தையை வளர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவு படி இவர்கள் இருவரும் ஒன்றாக கண்ணம்மா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். கதையில் இப்படி ஒரு மாற்றம் நிகழ காரணம் ஒன்று உள்ளது. வில்லியாக நடித்து வரும் ஃபரீனா நிஜ வாழக்கையில் கர்ப்பமாக இருந்து வந்தார். இருப்பினும், தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். தனது பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரை ஃபரீனா தொடரில் நடித்துள்ளார். இதனால் இவருக்கு அதிக பாராட்டுக்கள் குவிந்தது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையாக நடிக்க பயந்த காவ்யா அறிவுமணி – ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!

தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் சீரியலில் மிரட்டி வந்தார். பிரசவத்திற்கு சில நாட்கள் ஓய்வு எடுக்க விடுப்பில் இருக்கிறார் ஃபரீனா. இதனால் தான் கதை மாற்றப்பட்டுள்ளது. மேலும், பாரதி வெண்பாவிற்கு உதவி செய்ய மாட்டேன் என்று கூறி விடுகிறார். இதனால் ஃபரீனா வரும் காட்சிகள் அதிக மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஃபரீனாவும் இன்ஸ்டா பக்கங்களில் வீடியோ வெளியிட தொடங்கிவிட்டார். இதனால் ஃபரீனா விரைவில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக மிரட்ட வருவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!