பிறந்த சில நாட்களில் நடிகர் ஆரியுடன் நடித்துள்ள ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா மகன் – ரசிகர்கள் உற்சாகம்!

0
பிறந்த சில நாட்களில் நடிகர் ஆரியுடன் நடித்துள்ள 'பாரதி கண்ணம்மா' ஃபரீனா மகன் - ரசிகர்கள் உற்சாகம்!
பிறந்த சில நாட்களில் நடிகர் ஆரியுடன் நடித்துள்ள 'பாரதி கண்ணம்மா' ஃபரீனா மகன் - ரசிகர்கள் உற்சாகம்!
பிறந்த சில நாட்களில் நடிகர் ஆரியுடன் நடித்துள்ள ‘பாரதி கண்ணம்மா’ ஃபரீனா மகன் – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக வரும் நடிகை ஃபரீனாவின் பிறந்து சில நாட்களே ஆன அவரது மகன், பிக் பாஸ் புகழ் நடிகர் ஆரியுடன் சேர்ந்து நடித்துள்ளதாக குழந்தையின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஃபரீனா மகன்:

தற்போது சின்னத்திரையின் டாப் வில்லியாக நடித்து அனைவரையும் மிரட்டி வரும் நடிகை ஃபரீனா. இவர் முதலில் தொகுப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். ஆனால் தற்போது நடிப்பில் தனது முழு திறமையையும் காட்டி தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளார். வெள்ளித்திரையில் எப்படி படையப்பா நீலாம்பரி கதாபாத்திரம் இத்தனை வருடங்கள் கடந்தும் பேசப்படுகின்றதோ, அதேபோல் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா வெண்பா கதாபாத்திரம் மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபரீனா கடந்த மாதம் தனது ஆண் குழந்தையை பெற்றெடுத்து ஓய்வில் இருந்து வந்தார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் கவலை!

இவரின் வளைகாப்பு நிகழ்ச்சியை யூடுயூப் சேனலான கலாட்டா மிகவும் பிரமாண்டமாக நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சி இணையம் முழுவதும் மிகவும் டிரெண்டிங்கில் இருந்தது. அதேபோல், தற்போது ஃபரீனாவின் மகன் பிறந்து 30 நாட்கள் ஆன நிலையில், குழந்தையின் பெயர் சூட்டு விழா மற்றும் குழந்தையை பொதுவில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியையும் சமீபத்தில் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஃபரீனாவின் குழந்தைக்கு இஸ்லாமிய முறைப்படி முதலில் பெயர் வைக்கப்பட்டு, அதனை நடிகர் ஆரி அனைவர்க்கும் அறிமுகப்படுத்தினார்.

தன் கர்ப்பத்தை பற்றி கூற பயந்த ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யா – இயக்குனரின் ஓபன் டாக்!

அதன்படி, குழந்தைக்கு “ZAYN LARA RAHMAN” என்று பெயரிட்டு, அதன் பின்னர் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பல சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆரி, தனக்கும் குழந்தைக்கும் ஒரு சிறப்பான பந்தம் இருப்பதாக கூறினார். அதாவது ஃபரீனாவின் மகன் பிறந்து சில நாட்கள் ஆன நிலையிலேயே ஆரியுடன் நடித்துள்ளதாகவும், இதற்கு மேல் இதை பற்றி தான் ஒன்றும் சொல்ல முடியாது என்றும், அது சஸ்பெண்ஸ் என்றும் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து விட்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here