விஜய் டிவி விருதுடன் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா வெளியிட்ட பதிவு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி விருதுடன் 'பாரதி கண்ணம்மா' வில்லி பரினா வெளியிட்ட பதிவு - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி விருதுடன் 'பாரதி கண்ணம்மா' வில்லி பரினா வெளியிட்ட பதிவு - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி விருதுடன் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா வெளியிட்ட பதிவு – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் தான் பெற்றுக்கொண்ட விருதுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை பரினா

பரபரப்பான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அவ்வப்போது சில ஸ்வாரசியமான தருணங்களுடன் நகர்ந்து வருகிறது. இப்போது, கோர்ட் உத்தரவுப்படி கண்ணம்மாவுடன் மீண்டுமாக சேர்ந்து வாழும் பாரதிக்கு, அவரையே அறியாமல் கண்ணம்மா மீதான அக்கறை, பாசம் எல்லாம் துளிர்விட துவங்கி இருக்கிறது. என்றாலும் கண்ணம்மா மீதான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பாரதி, அவர் துரோகம் செய்துவிட்டதாக அவ்வப்போது சொல்லிக்கொண்டு வருகிறார்.

யுவனின் இசையில் மிரட்டலான ‘விசில் தீம் மியூசிக்’ – வலிமை அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இப்படி இருக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா இல்லாத தைரியத்தால் தான் பாரதியும் கண்ணம்மாவும் இப்படி சேர்ந்து இருக்கிறார்கள் என்றும், சீக்கிரமாக நடிகை பரினா வெண்பாவாக களமிறங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்திருக்கிறார் பரினா.

இந்த ‘பாரதி கண்ணம்மா’ கதையில் ஏற்கனவே அடிபட்ட பூனையாக சிறையில் இருந்து வெளிவரும் வில்லி வெண்பா, கண்ணம்மாவுக்கு எதிராக அடுத்து என்னவெல்லாம் செய்ய இருக்கிறார் என்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதற்கு மத்தியில் வலைதளங்களில் ஆர்வமாக இருந்து வரும் நடிகை பரினா அவ்வப்போது சீரியல் படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் கவனம் பெறுவது உண்டு.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ தேவயானி – ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சிறந்த வில்லி கதாப்பாத்திரத்திற்காக கிடைத்த விருதுடன் இருக்கும் வீடியோ ஒன்றை நடிகை பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனுடன் தனக்கு இந்த விருது கிடைத்த போது, தனது மகன் வயிற்றில் 2 மாத குழந்தையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகை பரினாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!