‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவுக்கு கணவர் கொடுத்த ஷாக் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவுக்கு கணவர் கொடுத்த ஷாக் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவுக்கு கணவர் கொடுத்த ஷாக் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவுக்கு கணவர் கொடுத்த ஷாக் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினாவுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அவரது கணவர் ரஹ்மான் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சர்பிரைஸ் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

தமிழ் சின்னத்திரையில் சுமார் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஐய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக வெளியாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இந்த சீரியல் எந்த அளவுக்கு பிரபலமோ, அதே அளவுக்கு இதில் நடித்து வரும் நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருந்து வருகின்றனர். அதுவும் இவர் மட்டும் இல்லையென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலே இருக்காது என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெயர் பெற்றிருப்பவர் நடிகை பரினா.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி சுஜிதாவின் காதலர் தின கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. கடந்த 4 ஆண்டுகளாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லியாக பயணித்து வரும் இவருக்கு கிடைத்த ஏச்சுகளும், பேச்சுகளும் ஏராளம். எப்படி என்றாலும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடித்து வரும் பரினா, சமீபத்தில் கூட குழந்தை பிறப்பிற்காக ஒரு மாத காலம் மட்டுமே ஓய்வெடுத்து விட்டு மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவாக களமிறங்கி இருக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இணைந்த “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து நடிகை பரினாவுக்கு அவரது கணவர் ரஹ்மான் கொடுத்துள்ள காதலர் தின சர்பிரைஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, பரினாவுக்காக அவருக்கு பிடித்த சாக்லேட்களை வாங்கி, அவர்களது புகைப்படத்துடன் கூடிய பரிசை அவரது கணவர் ரஹ்மான், ரக்ஷா மற்றும் லிசா உதவியுடன் சர்பிரைஸ் ஆக கொடுத்துள்ள வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!