‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா குழந்தையின் கியூட் புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!

0
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினா குழந்தையின் கியூட் புகைப்படங்கள் - இணையத்தில் வைரல்!
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினா குழந்தையின் கியூட் புகைப்படங்கள் - இணையத்தில் வைரல்!
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா குழந்தையின் கியூட் புகைப்படங்கள் – இணையத்தில் வைரல்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா, பிறந்து ஒரு மாதமே ஆகி இருக்கும் தன்னுடைய குழந்தையை வைத்து எடுத்துள்ள ரீசன்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகை பரினா

பொதுவாக ஒரு சினிமா அல்லது சின்னத்திரை பிரபலங்களை போலவே அவர்களின் வாரிசுகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கையை மீடியாவுக்கு முன்னாள் காட்டுவதை விரும்புவதில்லை. ஆனால் தற்போதோ சமூக வலைதளங்கள் மீதுள்ள ஆர்வத்தினால் பலரும் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக மாற்றியுள்ளனர்.

நெருப்பை பார்த்து பயந்த வருண், முரட்டுத்தனமாக தாக்கப்பட்ட சத்யா – “மௌன ராகம் 2” ப்ரோமோ!

இதிலும் குறிப்பாக, சமீப காலமாக பலரது கவனத்தையும் ஈர்க்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் பிரபலங்களின் வாழ்க்கையில் இன்றியமையாததாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் நடிகர், நடிகைகள் பலரும் திருமணம், திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு, கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு என அனைத்து நிகழ்வுக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Vijay Tv Bigg Boss 5 Promo | வீட்டின் தலைவர் பதவிக்கு புது டாஸ்க், மோதும் போட்டியாளர்கள்!

அந்த வகையில் சமீபத்தில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா தனது குழந்தையை வைத்து போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த குழந்தை பிறந்து வெறும் ஒரு மாதமே ஆகி இருக்கும் நிலையில் அதன் மழலையை ரசிக்கும் விதமாக மிகவும் கியூட்டான விதத்தில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது வீடியோவாக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்க வலைதளங்களில் எக்கச்சக்கமான ஃபேன் பாலோயர்களை கொண்டுள்ள பரினாவின் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கும் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here