பிரசவத்திற்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

0
பிரசவத்திற்கு பின் 'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவின் புதிய தோற்றம் - வைரலாகும் புகைப்படம்!
பிரசவத்திற்கு பின் 'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவின் புதிய தோற்றம் - வைரலாகும் புகைப்படம்!
பிரசவத்திற்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவின் புதிய தோற்றம் – வைரலாகும் புகைப்படம்!

பிரசவம் முடித்த கையேடு சீரியலில் நடிக்க துவங்கி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி நடிகை பரினா தற்போது வழக்கம் போல தனது போட்டோஷூட் பணிகளில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை பரினா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது சில முக்கியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இதுவரை கண்ணம்மாவை எதிரியாக பார்த்து வந்த பாரதி, மெது மெதுவாக கண்ணம்மா மீது இரக்கப்பட்ட ஆரம்பித்திருக்கிறார். இந்த பரிதாபம் போகப்போக காதலாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாக தான் கடந்த வார எபிசோடுகளில் பாரதி, கண்ணம்மா சம்பந்தப்பட்ட பல ரொமான்டிக் காட்சிகள் இடம் பிடித்து வருகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா & வருண் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி, கண்ணம்மாவின் ரொமான்ஸூக்கு செக் வைக்கும் விதமாக வில்லி பரினா ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது, குழந்தை பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி இருந்த நடிகை பரினா மீண்டுமாக தனது நடிப்பு பணியை துவங்கி இருக்கிறார். அந்த வகையில் சீரியல் கதைப்படி தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வர இருக்கும் வில்லி வெண்பா, நன்றாக போய்க்கொண்டிருக்கும் பாரதி, கண்ணம்மா வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நடிகர் சஞ்சீவின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம்!

இப்போது ஒரு மாத இடைவெளிக்கு பிறகு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வரும் நடிகை பரினா வழக்கம் போல தனது போட்டோஷூட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தையை வைத்து விதவிதமாக போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதனை வலைதளங்களில் பதிவிட அந்த புகைப்படங்கள் வைரலானது. தொடர்ந்து குழந்தை பிறப்புக்கு பின்பாக நடிகை பரினாவும் தற்போது போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!