தனது மகனின் வீடீயோவை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரீனா – குவியும் வாழ்த்துக்கள்!

0
தனது மகனின் வீடீயோவை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரீனா - குவியும் வாழ்த்துக்கள்!
தனது மகனின் வீடீயோவை வெளியிட்ட 'பாரதி கண்ணம்மா' வில்லி ஃபரீனா - குவியும் வாழ்த்துக்கள்!
தனது மகனின் வீடீயோவை வெளியிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி ஃபரீனா – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃபரீனா தனது குழந்தையின் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தார். தற்போது குழந்தை சிரிக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

ஃபரீனாவின் குழந்தை:

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னால் இருந்து இந்த அளவு பிரபலமாக இருந்திருக்க முடியாது. தினமும் சமூக ஊடகம் முழுவதும் ஃபரீனா மற்றும் அவரது குழந்தையை பற்றிய செய்திகள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஃபரீனா செய்யும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட செய்தியாக வந்து விடுகிறது. இந்த அளவு புகழை அடைவதற்கு ஃபரீனா கடந்து வந்த பாதை மிகவும் நீண்டது. தன்னை தாக்கிய பல விமர்சனங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் முன்னேற்றத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு முன்னேற்றியவர் ஃபரீனா.

கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை நீலிமா ராணி வளைகாப்பு நிகழ்ச்சி – பிரபலங்கள் பங்கேற்பு!

ஃபரீனா தனது கர்ப்ப காலத்தில் கூட ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். கேட்டதற்கு நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். தனது கர்ப்ப காலத்தை சுமையாக நினைக்காமல் அனு தினமும் அதை ரசித்து தனக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தையும் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் அவருக்கு கிடைத்த விமர்சனங்களை மற்ற யாராக இருந்தாலும் தாங்கி இருக்க முடியாது. ஆனால் ஃபரீனா அதை வெறும் விமர்சனமாக மட்டுமே எடுத்துக் கொண்டார்.

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் அம்மனாக களமிறங்கிய நடிகை ரட்சிதா – ரசிகர்கள் உற்சாகம்!

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மீண்டும் தனது படப்பிடிப்புக்கு திரும்பிய ஃபரீனா, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான கருத்துக்களை சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்து வந்தார். தற்போது தனது மகனின் பெயர் சூட்டு விழாவில் தான் குழந்தையை சமூகத்திற்கு அறிமுகம் செய்து பெயரை வெளியிட்டார். அதன் பிறகு குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது தனது குழந்தை சிரிக்கும் வீடியோ ஒன்றை ஃபரீனா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஃபரீனாவிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!