பாரதியுடன் ஜோடி போட்ட வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

0
பாரதியுடன் ஜோடி போட்ட வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!
பாரதியுடன் ஜோடி போட்ட வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!
பாரதியுடன் ஜோடி போட்ட வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஷூட்டிங்கின் போது, வில்லி வெண்பா அதாவது நடிகை பரினா பாரதி மற்றும் லட்சுமியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கடந்த சில எபிசோடுகளாக பல்வேறு திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இதுவரை பாரதி தான் லட்சுமியின் அப்பா என்கிற உண்மையை அனைவருக்கும் சொல்லியே தீருவேன் என்று கண்ணம்மா சபதம் எடுத்திருக்க, பாரதி அதற்கு இசைந்து கொடுப்பது போல தெரியவில்லை. மறு பக்கத்தில் லட்சுமியும் தன் அப்பா யார் என்கிற உண்மையை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்து வருகிறார்.

மீண்டும் சர்ச்சையில் ‘குக் வித் கோமாளி 3’ – சுனிதாவை அழவைத்த ராகுல் தாத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதற்கிடையில் பாரதிக்கு, லட்சுமியின் அப்பா யார் என்ற விஷயம் தெரிந்திருப்பதாக வடிவுக்கரசி, லட்சுமியிடம் சொல்ல அவர் பாரதியிடம் தன் அப்பா யார் என்று கேட்பது போல பல்வேறு பாசப்போராட்டங்கள் நிறைந்த எபிசோடுகள் இதுவரை ஒளிபரப்பாகி இருந்தது. இப்போது கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவாரா, லட்சுமியிடம் பாரதி தான் உன்னுடைய அப்பா என்ற உண்மையை கண்ணம்மா சொல்வாரா என்ற எதிர்பார்ப்புடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் நகர்ந்து வருகிறது.

மீண்டும் சின்னத்திரையில் நடிகை குஷ்பூ – கலர்ஸ் தமிழில் புதிய சீரியல்! ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கிடையில் பாரதியை கண்ணம்மாவுக்கு எதிராக திருப்பி விடுவதற்கான அனைத்து சதி வேலைகளில் ஈடுபட்டு வரும் வெண்பா, பாரதியுடன் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா, நடிகர் அருண் மற்றும் ரக்ஷாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய அது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!