‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த வெண்பா பரினா – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் பிரபல நடிகை பரினா தற்போது சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த கையோடு, புதிய தோற்றத்தில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகை பரினா
தற்போது விறுவிறுப்பான கோணத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் திருமணம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீரியலில், இதுவரை பாரதி மேல் இருக்கும் காதலால் ஏகப்பட்ட வில்லத்தனங்களை செய்து பாரதியையும், கண்ணம்மாவையும் பிரித்து பாரதியை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் வெண்பா. இதற்கிடையில் இந்த கதையில் திடீர் திருப்பமாக வெண்பாவின் அம்மா ஷர்மிளா என்ற புதிய கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வெண்பாவின் வில்லத்தனம் போகப்போக நகைச்சுவையாக மாறிக் கொண்டிருக்கிறது.
பார்வதியை கடத்தியது யார் என்பதை கண்டுபிடித்த சந்தியா – புதிய திருப்பங்களுடன் ராஜா ராணி சீசன் 2!
இப்போது கூட வெண்பாவுக்கு அவரது அம்மா மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், அதை கெடுக்கும் விதமாக பல நாடகங்களை நடத்தி வருகிறார் அவர். இதனால், வெண்பாவின் திருமணம் நடைபெறுமா, பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்களா என்ற பலத்த எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெயிட் ஆன வில்லத்தனங்களை வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் பிரபல சின்னத்திரை நடிகை பரினா.
Exams Daily Mobile App Download
திரைக்கு முன்னால் ஆக்ரோஷமான வில்லியாக வரும் நடிகை பரினா நிஜத்தில் கலகலப்பானவர் தான். இதுவே, நடிகை பரினாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களையும், பெயரையும் சம்பாதித்து தந்திருக்கிறது. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பரினா தற்போது சீரியலில் இருந்து சிறிய பிரேக் எடுத்து விட்டு கோடை காலத்தை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் நடிகை பரினா தற்போது மர்டர்ன் லுக்கில் எடுத்துள்ள வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எப்போதும் பரினாவை கோபமான முகத்துடன் பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவில் அவரை ரொமான்டிக் ஆக பார்த்ததும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.