திடீரென ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அருண் பாரதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
திடீரென 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் அருண் பாரதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
திடீரென 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் அருண் பாரதி - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
திடீரென ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அருண் பாரதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் அருண் சீரியலை விட்டு விலகவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது தான் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பிரிந்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் கண்ணம்மாவின் நிறத்தை பார்த்து அனைவரும் வெறுத்து ஒதுக்கினர். அப்போது கண்ணம்மாவின் நல்ல குணத்தை தெரிந்து கொண்டு கண்ணம்மாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

தாத்தா பிறந்தநாளுக்கு தனத்தை அழைத்த பாக்கியா, எழில் அமிர்தாவை நினைத்து கோவப்படும் பாட்டி – இன்றைய எபிசோட்!

ஆரம்பத்தில் கண்னம்மாவை பாரதியின் குடும்பத்தில் உள்ள யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது கண்ணம்மாவிற்கு துணையாக பாரதி தான் இருந்து வந்தார். கண்ணம்மா கர்ப்பமான பிறகு தான் கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகம் வருகிறது. இது தன்னுடைய குழந்தை இல்லை என சந்தேகப்பட்டு கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்துகிறார். இதற்கு இடையே வெண்பாவும் சேர்ந்து கொண்டு பாரதிக்கு கண்ணம்மா மீதுள்ள சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறார். கண்ணம்மாவை பிரிந்து கிட்டத்தட்ட 10ஆண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் துளி கூட குறையவில்லை. கண்ணம்மாவை விட்டு தூர விலக வேண்டும் என்று தான் நினைக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆனால், கண்ணம்மாவை விட்டு விலக முடியாமல் விதி சதி செய்து கொண்டிருக்கிறது. தற்போது கூட பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் கிட்ட கிட்ட இருப்பதால் இருவரும் சேர வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த சமயத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் அருண் சீரியலை விட்டு விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக திருமதி செல்வம் சீரியல் மூலமாக பிரபலமான சஞ்சீவ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here