விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் நடிக்கும் வெப்சீரிஸ் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" அருண் நடிக்கும் வெப்சீரிஸ் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் நடிக்கும் வெப்சீரிஸ் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவியில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் தற்போது புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

பாரதி கண்ணம்மா ஹீரோ:

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி ஆகும். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் டாப் சீரியல்களாக மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் சூப்பர் ஹிட்டாகவும், அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியலாக ஓடிக் கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா ஆகும். இந்த சீரியலில் பாரதியாக நடிகர் அருண் நடிக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் லூட்டிகள் – வைரலாகும் வீடியோ!!

கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடிக்கிறார். இருவருக்கும் திரையுலகில் இதுவே முதல் வாய்ப்பு, ஆனால் அவர்கள் நடிக்க மட்டும் செய்யாமல் காதாபாத்திரமாக வாழ்ந்து வருகின்றனர். அதுவே இந்த சீரியல் ஹிட்டாக முக்கிய காரணமாக உள்ளது. மேலும் TRPயிலும் இந்த சீரியல் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இந்த சீரியலில் உள்ள அனைத்து கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதன் படி பாரதி கண்ணம்மா நடிகர் பாரதிக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக அவர் பல விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவருக்கு வெப் சீரியஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. Fiance To Be என்ற அழகான கதை கொண்ட வெப் சீரிஸில் அவர் நடித்துள்ளார். அந்த வெப் சீரிஸ் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வெப் சீரிஸ் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!