லக்ஷ்மிக்காக கண்ணம்மாவிடம் சண்டை போடும் பாரதி, சந்தோசப்படும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ இந்த வாரம்!

0
லக்ஷ்மிக்காக கண்ணம்மாவிடம் சண்டை போடும் பாரதி, சந்தோசப்படும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' இந்த வாரம்!
லக்ஷ்மிக்காக கண்ணம்மாவிடம் சண்டை போடும் பாரதி, சந்தோசப்படும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' இந்த வாரம்!
லக்ஷ்மிக்காக கண்ணம்மாவிடம் சண்டை போடும் பாரதி, சந்தோசப்படும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ இந்த வாரம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் இனி திங்கள் முதல் வரும் வாரத்திற்கான எபிசோடுகள் குறித்த ப்ரோமோ முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஒரு சுவாரஸ்யமான காட்சி வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா ப்ரோமோ:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கண்ணம்மாவின் பிறந்த நாளில் லட்சுமி தன் அப்பாவை பற்றி கேட்ட கேள்விக்கு கண்ணம்மா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது பாரதி தான் லக்ஷ்மியை கூப்பிட்டு பேசுவார். உனக்காக இவ்வளவு கஷ்டப்படும் உன் அம்மா இருக்கும் போது, உன்னை இதுவரைக்கும் பார்க்கவே வராத அப்பா பற்றி கேட்டு உன் அம்மாவை நீ கஷ்டப்படுத்துற என்று லக்ஷ்மிக்கு புரியவைப்பார். இனி உனக்கு அம்மா, அப்பா எல்லாம் உன் அம்மா தான் என்று சொல்லுவார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகியுள்ள மீனா – இனி எப்போது வருவார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதனால் கண்ணம்மா உட்பட அனைவரும் மிகவும் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், இந்த வாரத்தில் வரும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பாரதியும் ஹேமாவும் காரில் வந்து கொண்டிருக்கும் போது, முன்னாள் வந்து ஒரு குழந்தை விழுந்து விடுகிறது. பார்த்தால் அது லட்சுமி தான். இதனால் லக்ஷ்மியை கூடி வந்து வீட்டில் விடுகிறான் பாரதி. அதன்பிறகு குழந்தைகளை விளையாட அனுப்பி விடுகிறார்.

நடந்தேறிய கோபி, ராதிகா திருமணம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடி திருப்பம்! ரசிகர்கள் ஷாக்!

அதன்பிறகு கண்ணம்மாவிடம் வந்து உனக்கு அறிவில்ல, குழந்தையை இப்படி தனியா ரோட்டில விட்டுட்டு நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க, என்று கேட்டு திட்டுகிறார். இதற்கு கண்ணம்மா சிரிக்கவும், ஏன் சிரிக்குற என்று கேட்கிறார். இப்போ தான் நீங்க லக்ஷ்மிக்கு அப்பா மாதிரி பேசுறீங்க என்று சொல்லுகிறாள். அதற்கு பாரதி அப்பா மாதிரி பேசுறதாகவே வைச்சுக்கோ இப்போ என்ன என்று கேட்டு சண்டை போடுகிறார். இதனால் இனி வரும் காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here