
பாரதியை திருமணம் செய்துகொள்வது போல கனவு கண்ட வெண்பா – நிஜத்திலும் நடக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பாரதியை திருமணம் செய்துகொள்வது போல வெண்பா கனவு காணுகிறார். அப்போது வெண்பாவின் அம்மா அங்கு வந்து வேறொரு மாப்பிளை பார்த்து விரைவில் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என சவால் விடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாரதி எப்போது தான் DNA டெஸ்ட் எடுத்து கண்ணம்மாவை பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணம்மாவை விட்டு பாரதி எவ்வளவு தூரமாக போக நினைத்தாலும் விதி அவர்களை சேர்த்து வைக்க நினைக்கிறது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – இந்திய விமான சேவை ரத்து! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தற்போது கூட பாரதி VB எனும் ஒரு புதிய மருத்துவமனை ஒன்றில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார். அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீசராக பணியில் சேர்ந்துள்ளார். ஒரே மருத்துவமனையில் இருவரும் வேலை செய்யப் போகிற விஷயம் அறிந்து வெண்பாவிற்கு கடுப்பாகிறது. எப்படியாவது பாரதியின் வாழ்க்கையில் இருந்து கண்ணம்மாவை விரட்டி விட்டு விட்டு பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்.
இதற்கு பிறகு தூக்கத்தில் பாரதியை திருமணம் செய்துகொள்வது போல வெண்பா கனவு காணுகிறார். உடனே மகிழ்ச்சியில் எழுந்து கனவில் நடந்தது எப்படியாவது நிஜத்திலும் நடந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். அதற்கு பிறகு வெண்பாவின் முகத்தில் வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா தண்ணீரை ஊற்றி தேவையில்லாமல் பகல் கனவு கண்டு கொண்டிருக்காதே, நான் உனக்கு வேகமாக வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.