
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலத்தின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல இயக்குனர் பிரவீன் பென்னட் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் டிவியை சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டம்:
விஜய் டிவியின் ஃபேவரிட் இயக்குனர் பிரவீன் பென்னட். இவர் சேனலில் பல சூப்பர் ஹிட் சீரியல்களையும் இயக்கியுள்ளார். இவரின் சீரியல் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சரவணன் மீனாட்சி முதல் ராஜா ராணி முதல் சீசன் வரை இவரை இயக்கிய அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்கள். இவரின் சீரியலில் நடித்தால் அவர்கள் தான் அடுத்த ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். இதனால் இவரின் சீரியலில் வாய்ப்பு கிடைப்பதற்காக பல நட்சத்திரங்களும் ஏங்கி வருவார்கள். அந்த அளவிற்கு கதையில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்
மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு தாயான கண்ணம்மா, மகிழ்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தற்போது ஒரே நேரத்தில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, நம்ம வீட்டுப் பொண்ணு என தொடர்ந்து 3 சீரியல்களை இயக்கி வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 இரண்டும் ப்ரைம் டைம் சீரியல்கள். இவரை இரண்டுமே ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பணி என்ற அளவை தாண்டி மிகவும் நட்புடன் பழகி வருவார் என்று பல பிரபலங்களும் கூறியுள்ளனர். இவர் விஜய் டிவியில், முன்னதாக வந்த கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகம் ஆன சாய் பிரமோதித்தா வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாய் ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.
சன் டிவி “வானத்தை போலே” சீரியலில் துளசியாக களமிறங்கிய புதிய நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
இவர்கள் இருவருமே அனைத்து விஜய் டிவி பிரபலங்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பதால் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் இந்த ஜோடியை காணலாம். தற்போது இயக்குனர் பிரவீன் அவர்களின் 2வது மகனின் முதல் பிறந்த நாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்த நாள் விழாவில் விஜய் டிவியின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பல நட்சத்திரங்களும் தங்களின் வலைப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது மிகவும் வைரலாகி உள்ளது.