விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வைரல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வைரல்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வைரல்!

பாரதி கண்ணம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் ஏற்கனவே கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலகிய நிலையில் தற்போது வினுஷா தேவி சீரியலில் நடித்து வருகிறார். அவர் படப்பிடிப்புத் தலத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்தும் சமூக கருத்துக்களையும், அன்றாட குடும்பங்களில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் ஏகப்பட்டவர்கள் விரும்பி சீரியலை பார்க்கின்றனர். இந்த சீரியல் மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் கண்ணம்மாவை மையமாக வைத்தே கதை கொண்டு செல்லப்பட்டது. சிறு வயதில் அம்மாவை இழந்து சித்தி கொடுமையால் வளர்ந்த பெண் தான் கண்ணம்மா. அதன் பின் பாரதியை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் திருப்பம் – மருத்துவமனையில் பார்வதியை பார்த்த குடும்பத்தினர்!

பாரதி தன்னுடைய முழு அன்பையும் கொட்டி கண்ணம்மாவை பார்த்துக் கொள்ள சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்றது. அதன் பின் கண்ணம்மா கர்ப்பமாகி விட பாரதிக்கு சந்தேகம் வருகிறது. அதனால் பாரதி கண்ணம்மாவை விட்டு பிரிந்து விட பின் கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்கிறது. அதில் ஒரு குழந்தை அம்மாவிடமும் இன்னொரு குழந்தை வளர்கிறது. இப்படியே கதை கொண்டு செல்லப்பட்ட நிலையில் கண்ணம்மாவும், பாரதியும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்க அங்கே சக்தி என்ற குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதற்காக கண்ணம்மாவும், பாரதியும் செய்த முயற்சிகளை பற்றி கதையில் காட்டப்பட்டது. பல தடைகளை தாண்டி சக்திக்கு ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்துள்ளது. அதனால் கண்ணம்மாவிற்கும், பாரதிக்கும் பல பாராட்டுக்கள் கிடைக்கிறது. கண்ணம்மா மீது பாரதிக்கு சிறிது அக்கறை வருகிறது. இப்படி கதைக்களம் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா படப்பிடிப்புத் தலத்தில் சக நடிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்திற்கு பாரதி கண்ணம்மா ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here