லட்சுமி & ஹேமாவுடன் குடும்பமாக இணைந்த பாரதி – ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!

0
லட்சுமி & ஹேமாவுடன் குடும்பமாக இணைந்த பாரதி - ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!
லட்சுமி & ஹேமாவுடன் குடும்பமாக இணைந்த பாரதி - ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!
லட்சுமி & ஹேமாவுடன் குடும்பமாக இணைந்த பாரதி – ஒருவேளை உண்மை தெரிந்திருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமிக்கு பாரதி பற்றிய ரகசியம் எப்போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நேரத்தில், தற்போது பாரதி, லட்சுமி, ஹேமா மூவரும் சேர்ந்து இருப்பது போல வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

சமீப காலமாக பல ஸ்வாரசியமான திருப்பங்கள் நிறைந்த எபிசோடுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சிறந்த ஜோடிகளாக வலம் வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தேகம் காரணமாக பிரிந்து விட இவர்கள் இணையும் தருணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இதற்கிடையில் பல ட்விஸ்டு அண்ட் டர்ன்ஸ் உடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது லட்சுமிக்கு அவரது அப்பா பாரதி என்ற உண்மை தெரிய வரப்போகிறது.

கணவரை பிரிந்து வாழும் விஜய் டிவி சீரியல் நடிகை – வைரல் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

இந்த உண்மை தெரிந்து விட்டால் லட்சுமி, பாரதியை அப்பாவாக ஏற்றுக்கொள்வாரா, அல்லது அவரது முடிவு என்னவாக இருக்கும் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான காட்சிகள் வரும் வார எபிசோடுகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

ஆணாக மாறிய சன் டிவி பிரபல சீரியல் நடிகை கயல் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

அதாவது, லட்சுமி மற்றும் ஹேமா இருவரையும் அவர்கள் படிக்கும் பள்ளியில் வைத்து பாரதி சந்திப்பது போன்ற காட்சிகள் பாரதி கண்ணம்மா’ சீரியலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிகளில் வெண்பாவும் பாரதியுடன் சேர்ந்திருக்கிறார். இப்போது இந்த புகைப்படங்களில் பாரதியுடன் லட்சுமி மற்றும் ஹேமா இருவரையும் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை லட்சுமிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என்று தெரிந்திருக்குமோ, ஹேமாவும் இந்த உண்மையை அறிந்திருப்பாரோ என்ற கோணத்தில் சிந்திக்க துவங்கி விட்டனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here