உச்சகட்ட மகிழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

0
உச்சகட்ட மகிழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' சீரியல் அருண் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!
உச்சகட்ட மகிழ்ச்சியில் 'பாரதி கண்ணம்மா' சீரியல் அருண் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!
உச்சகட்ட மகிழ்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அருண் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து TRPயில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் துவக்கத்தில் குடும்ப ரசிகர்கள் மட்டுமே இருந்த நிலையில், கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி ரோடு ரோடாக நடக்கும் சீன்கள் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ் உருவாக காரணமாக இருந்தது. அதுவே இந்த சீரியலை அனைத்து வயதினரையும் பார்க்கும் படி செய்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ஒதுக்கப்பட்ட இசைவாணி – மனம் திறந்த பிரபலம்! ரசிகர்கள் ஷாக்!

அதனால் TRPயில் முதலிடத்தை பிடித்து தொடர்ந்து சீரியலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் 3 ஆண்டுகளாக நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகிய பின் TRPயில் சற்று சரிவு ஏற்பட்டது. ஆனால் அடுத்ததாக களமிறங்கிய வினுஷா தன்னுடைய நடிப்பு திறமையால் மீண்டும் TRPயை உயர்த்தி இருக்கிறார். இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவர் நடித்து வருகிறார். அவர் தன்னுடைய சொந்த பெயரை மறந்து பாரதி என்ற பெயரில் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

குழாயடி சண்டையாக மாறிய ‘பிக்பாஸ்’ வீடு, ப்ரியங்கா & தாமரை இடையே வெடித்த மோதல் – ப்ரோமோ ரிலீஸ்!

இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு நிகழ்காலம், ஏனோ வானிலை மாறுதே, மதி மயங்கினேன், கள்ளன் உட்பட பல குறும்படங்களில் நடித்திருக்கிறார். அதில் கிடைக்காத புகழ் அனைத்தும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக அவருக்கு கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் நடிகர் அருண் பிரசாத். தற்போது வட இந்தியா சென்றுள்ள அருண் அங்கே பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது உங்களுடன் டான்ஸ் ஆடலாமா என்று கேட்கும் ஒருவரை அழைத்து அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார். அந்த நேரத்தில் தனக்கு பிறந்தநாள் இன்று என்று அருண் சொல்ல அவர் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டே நடனம் ஆடுகிறார். மேலும் வடக்கிலிருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கேப்ஷனிட்டு இந்த வீடியோவை அருண் பதிவிட்டு இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!