விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் பிரசாத் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" அருண் பிரசாத் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் பிரசாத் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல அதிரடி திருப்பங்களுடன் கதைக்களம் சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் அந்த டாப் சீரியலில் ஹீரோ பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பிரசாத் குறித்த முழு விவரம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா அருண்:

பாரதி கண்ணம்மா சீரியல் 700 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் பாரதி கண்ணம்மா சேருவார்களா என எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ புகழ் செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

மேலும் பாரதி கதாபாத்திரத்தில் தொடர்ந்து அருண் பிரசாத் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன்னதாக மேயாத மான் படத்தில் நடித்து இருக்கிறார். அதன் மூலம் அவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவருடைய முழு பெயர் அருண் பிரசாத், இவர் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர். இவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம். நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் அவர் சென்னைக்கு வந்திருக்கிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ புகழ் செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இவர் தன்னுடைய பள்ளி படிப்பை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயா பள்ளியில் படித்து இருக்கிறார். மேலும் கல்லூரி படிப்பை MCC காலேஜில் படித்திருக்கிறார். கல்லூரி படிக்கும் காலத்தில் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் பல குறும்படங்களில் நடித்து இருக்கிறார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் தான் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!