விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி – அவரே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி - அவரே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி - அவரே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி – அவரே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி கடந்த சில நாட்களாக சீரியலில் இடம்பெறாமல் இருந்து வரும் நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறாரா என்று எழுந்து வந்த பல கேள்விகளுக்கு, ஸ்வீட்டி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்வீட்டி

தற்போது விறுவிறுப்பாகவும், ஸ்வாரசியமாகவும் வெளியாகி கொண்டிருக்க கூடிய ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் மீண்டும் பாரதியை பிரிந்து வாழும் கண்ணம்மா, விரைவில் தன் மகளுக்கு அப்பா பாரதி தான் என்பதை உலகறிய நிரூபிப்பதாக சபதம் போட்டிருக்கிறார். இதற்கிடையில் வெண்பாவும், பாரதியுடன் அடுத்த 6 மாதம் சேர்ந்து வாழப்போவதாக கண்ணம்மாவிடம் சவால் விட்டிருக்கிறார். இப்படிப்பட்ட காரசாரமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

TNPSC குரூப் 2, 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!

இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து வந்த நடிகை ஸ்வீட்டி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த ஒரு சில எபிசோடுகளாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ஸ்வீட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் காட்டப்படவில்லை. இதனால் அவர் சீரியலை விட்டு விலகிவிட்டாரா என்றும் அஞ்சலியை மிஸ் செய்து வருவதாகவும் சிலர் வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர். மேலும் அஞ்சலியை வைத்து வெளியான சில மீம்களும் வைரலாகி வருகிறது.

இந்த மீம்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து விளக்கம் அளித்த நடிகை ஸ்வீட்டி, விரைவில் ‘மற்றொரு ப்ராஜக்ட் மூலம் உங்களை சந்திப்பேன்’ என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இதனை வைத்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ஸ்வீட்டி விலக இருப்பதாக வெளிவந்த தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. இப்படி இருக்க நடிகை ஸ்வீட்டி, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சூப்பர் குயீன்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் இம்மாதம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விபரம் இதோ!

விரைவில் அவர் ஜீ தமிழ் டிவியில் ஒரு சீரியலில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது. என்றாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சுமார் 4 ஆண்டு காலம் அஞ்சலியாக பயணித்து வந்த நடிகை ஸ்வீட்டியின் இந்த திடீர் விலகல் அவரது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஸ்வீட்டிக்கு பதிலாக அஞ்சலியாக நடிக்கப்போகும் நடிகை யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் மக்களிடையே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!