விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியாக அறிமுகமாகும் ஜீ தமிழ் நடிகை அருள்ஜோதி – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலியாக அறிமுகமாகும் ஜீ தமிழ் நடிகை அருள்ஜோதி - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' அஞ்சலியாக அறிமுகமாகும் ஜீ தமிழ் நடிகை அருள்ஜோதி - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலியாக அறிமுகமாகும் ஜீ தமிழ் நடிகை அருள்ஜோதி – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி மனோகரன் சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஜீ தமிழ் நடிகை அருள்ஜோதி அஞ்சலியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த முக்கியமான தொடரான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அவ்வப்போது சில சறுக்கல்களை சந்தித்து வந்தாலும், இதன் கதைக்களம் மிகவும் உறுதியாக இருப்பதால் TRP ரேட்டிங்கில் எப்போதும் முதன்மையான இடத்தை பிடிப்பது வழக்கம். இப்படி ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சமீப காலமாக சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

குக் வித் கோமாளி’ ஷோவில் அம்முவின் கையை பிடித்த புகழை மிரட்டிய சக்தி – இதனால் தானா? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் முதன் முதலாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவுமணியாக நடித்து வந்த நடிகை காவ்யா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிப்பதற்காக இத்தொடரில் இருந்து விலகினார். இவரை தொடர்ந்து அகிலன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் அகிலன், கண்ணம்மா என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோரும் சினிமா வாய்ப்புகளுக்காக சீரியலை விட்டு சென்றிருந்தனர். இவரை தொடர்ந்து மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அஞ்சலியாக நடித்து வந்த நடிகை ஸ்வீட்டி தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

BB Ultimate promo 3 | வனிதா பொருளை திருடிய ஜூலி, கேள்விகளால் தாக்கிய வனிதா!

அதாவது, ஜீ தமிழில் புத்தம் புதிய சீரியல் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் ஸ்வீட்டி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விடைபெற்றுள்ளார். இது தவிர ஜீ தமிழின் ‘சூப்பர் குயீன்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் இவர் தற்போது கலந்து கொண்டு வருகிறார். இப்போது ஸ்வீட்டியின் இந்த திடீர் விலகல் ரசிகர்களுடையே அதிர்வலையை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தை, ஜீ தமிழின் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் ரம்யாவாக நடித்து வரும் நடிகை அருள்ஜோதி ரீபிளேஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!