திடீரென கோபப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ அகிலன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
திடீரென கோபப்பட்ட 'பாரதி கண்ணம்மா' அகிலன் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
திடீரென கோபப்பட்ட 'பாரதி கண்ணம்மா' அகிலன் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
திடீரென கோபப்பட்ட ‘பாரதி கண்ணம்மா’ அகிலன் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலனாக நடித்த நடிகர் மற்றும் அஞ்சலி இருவரும் சேர்ந்து ஒரு யூடுயூப் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளிக்கும் போது அகிலன் கோவப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியின் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த சீரியலின் நடிகர்கள் அனைவரும் மிகவும் பிரபலமடைந்து விட்டனர். இந்த தொடரின் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்புகள் கிடைத்து தொடரில் இருந்து விலகி இருந்தார். இது மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு முன்னதாக தொடரில் இருந்து விலகியவர் நடிகர் அகிலன். இவருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் தான் இவரும் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவி “கயல்” சீரியல் – ரசிகர்கள் வாழ்த்து!

பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் மற்றும் அஞ்சலி ஜோடிக்கு என்று பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது. இதனால் தொடரில் இருந்து அகிலன் திடீரென்று விலகியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அகிலன் மற்றும் கண்மணி இருவரும் சேர்ந்து ஹோரா என்ற வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இந்த பாடல் தற்போது இணையம் முழுவதும் மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இவர்களது ஜோடியினை பல மாதங்களுக்கு பின் காண்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தற்போது இந்த பாடலின் ப்ரோமோஷனுக்காக பல சேனல்களிலும் இவர்கள் சேர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர். அதில் சமீபத்தில் பிரபல சேனலின் தொகுப்பாளர் நிக்கி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகிலன் மற்றும் கண்மணி இருவரும், திடீரென்று சண்டை போட்டுக் கொள்வதால் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பதட்டத்தில் வந்து இவர்களை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அதனை பார்த்த அகிலன், அஞ்சலி மற்றும் நிக்கி மூவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். கடைசியில் இது பிரான்க் என்று சொல்லியதும் தான் அவரும் சிரிக்க ஆரம்பித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here