மீண்டும் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அகிலன் & அஞ்சலி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
மீண்டும் இணைந்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் அகிலன் & அஞ்சலி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மீண்டும் இணைந்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் அகிலன் & அஞ்சலி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மீண்டும் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அகிலன் & அஞ்சலி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் பழைய அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அகில் மற்றும் நடிகை கண்மணி இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதனால் அவர்களது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது, பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். தற்போது இதில் முக்கிய கட்டமாக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக கோர்ட் உத்தரவின் பெயரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று பாரதி குடும்பத்தினர் அனைவரும் விரும்பி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இந்த சீரியலில் முதலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் அகில்.

‘பாக்கியலட்சுமி’ இனியா தோழி தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை அடிக்கும் எழில் – அனல் பறக்கும் எபிசோட்!

அவருக்கு ஜோடியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிகை கண்மணி நடித்து வந்தார். இருவரது ஜோடியும் அந்த சீரியலில் மிகவும் அதிகமாக பேசப்பட்டது. இந்நிலையில் பலரும் எதிர்பாராத விதமாக நடிகர் அகில் சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் அவர் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனால் அவருக்கு பதிலாக அவரது அகிலன் கதாபாத்திரத்தில் நடிகர் சுகேஷ் நடித்து வருகிறார்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் விவாகரத்து வதந்திகளுக்கு பதிலடி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இது ஒரு புறம் இருக்க, நடிகர் அகிலன் தற்போது தன்னுடன் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கண்மணியுடன் ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்து உள்ளார். இருவரது ஜோடி ஏற்கனவே சீரியலில் மிகவும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த மியூசிக் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த விடீயோவை தற்போது 1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!