விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலத்திற்கு திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் பிரபலத்திற்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் பிரபலத்திற்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலத்திற்கு திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் நடிகை திருமணம்:

தமிழ் சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் முதன் முதலில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான ‘நாதஸ்வரம்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இவர் நாதஸ்வரம் சீரியலில் கோபியின் தங்கையாக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். பின்னர் ‘வாணி ராணி’, ‘கல்யாண பரிசு’, ‘பொன்னூஞ்சல்’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற பல சீரியல்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

தனத்தின் பிறந்தநாளுக்கு சமையல் செய்வதாக சவால் விடும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

மேலும் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தின் மூலமாக பெரிய திரையில் அறிமுகமானார். என் தங்கச்சிக்கு கல்யாணம், கத்தி முனை போன்ற குறும்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அதன் பின்பு சின்னத்திரையை விட்டு விலகினாலும் சோசியல் மீடியாவில் ஆர்வம் காட்டி வந்தார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஸ்ருதி சண்முக ப்ரியாவுக்கும், பாடி பில்டரான அரவிந்த் சேகருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் பெற்றோர் மற்றும் நண்பர்கள், சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here