‘பாரதி கண்ணம்மா’ நடிகர்கள் பற்றிய உண்மைகளை உடைத்த புதிய அகில் – வைரலாகும் பதிவு!!

0
'பாரதி கண்ணம்மா' நடிகர்கள் பற்றிய உண்மைகளை உடைத்த புதிய அகில் - வைரலாகும் பதிவு!!
'பாரதி கண்ணம்மா' நடிகர்கள் பற்றிய உண்மைகளை உடைத்த புதிய அகில் - வைரலாகும் பதிவு!!
‘பாரதி கண்ணம்மா’ நடிகர்கள் பற்றிய உண்மைகளை உடைத்த புதிய அகில் – வைரலாகும் பதிவு!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் நடிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளனர். சமீபத்தில் அகிலனாக நடிக்கும் நடிகர் சுகேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி பதில் செஷன் ஒன்றை நடத்தியுள்ளார்.

அகிலின் பதில்கள்:

சின்னத்திரையில் தொடர் ஆரம்பிக்கும் போது உள்ள நடிகர்களே சில சமயங்களில் முடிவு வரைக்கும் நடிப்பதில்லை. கதையின் மாற்றங்களினாலும், வேறு பல காரணங்களினாலும் நடிகர்கள் மாற்றப்படுகின்றனர். இதனால் அந்த கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்தவரையும், புதிதாக நடிப்பவரையும் வைத்து பல ஒப்பீடுகள் நடக்கும். கதையில் அவர்களின் ஒன்றிய நடிப்பை பார்த்து மக்களும் விரைவாக புதியவர்களை ஏற்றுக் கொள்கின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பியான அகிலன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் தனது கணவருக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு – வைரலாகும் வீடியோ!

அதில் நடித்து வந்த அகிலன் பல்வேறு காரணங்களினால் தொடரில் இருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக அகிலன் வேடத்தில் சுகேஷ் என்ற புதிய நடிகர் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்விகளை கேளுங்கள், பதில் அளிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரிடம் ரசிகர்கள் சீரியல் தொடர்பாகவும், அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் பல கேள்விகளை கேட்டனர். அவை அனைத்திற்கும் சுகேஷ் பதில் அளித்துள்ளார். அதில் பாரதி கண்ணம்மா தொடரில் இருபவர்களில் மிகவும் அன்பானவர் யார் என்று கேட்டதற்கு, வேற யார இருக்க முடியும். எங்க அண்ணன் பாரதி தான் என்று கூறியுள்ளார்.

‘வெண்பா இஸ் பேக்’ பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின் மிரட்டலான ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

மற்றொரு கேள்வியில் சீரியலில் வரும் லட்சுமி மற்றும் ஹேமா இரண்டு குழநதைகளில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டுள்ளனர். அதற்கு இவர்கள் இருவருமே என் செல்லக்குட்டிகள் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர் பாரதி கண்ணம்மா ரோஷினி பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு, தானாக கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்த திறமையானவர் என்ற குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களின் கேள்விக்கு சுகேஷின் பதில்கள் அனைத்தும் உண்மையாக இருப்பதால் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!