விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் பிரவீனுக்கு தற்போது திடீரென திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், இவரது திருமண புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் பிரவீன்

விஜய் டிவி சீரியல்களில் வில்லன் நடிகராக வலம் வந்து மக்களின் ஏகப்பட்ட விமர்சனங்களை பெற்றிருக்கும் நடிகர் பிரவீன் தேவசகாயம். அந்த வகையில் விஜய் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘ஈரமான ரோஜாவே’ மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பிரவீன். இதில் குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் முதலில் வில்லனாக வந்து பிறகு பாசிட்டிவ் கேரக்டராக மாறிய இவரது துர்கா கதாப்பாத்திரம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

விஜய் டிவியில் விஜே மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

அதே போல ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் அழகர் என்ற வில்லன் ரோலில் நடித்து இறுதியில் நல்லவராக மாறி ரசிகர்களிடம் கிளாப்ஸ்களை அள்ளியிருக்கும் நடிகர் பிரவீனுக்கு தற்போது சத்தமே இல்லாமல் திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி சீரியலில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா என்பவரை மணமுடித்திருக்கும் நடிகர் பிரவீனுக்கு தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது அநேகமாக காதல் திருமணம் தான் என்று சொல்லப்பட்டு வருகிறது.

சரஸ்வதியை பெண் பார்க்க வரும் கோதை, ஏற்க மறுக்கும் சொக்கலிங்கம் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது நடிகர் பிரவீன் மற்றும் ஐஸ்வர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் குழுவை சேர்ந்த நடிகர், நடிகைகள் இத்தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாக, திருமணத்தில் இணைந்திருக்கும் இந்த காதல் ஜோடிகளுக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here