விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் அருண் பிரசாத் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து விலகும் அருண் பிரசாத் - அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகும் அருண் பிரசாத் – அவருக்கு பதிலாக களமிறங்கும் பிரபல நடிகர்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் தொடக்கம் முதல் டாக்டர் பாரதியாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வரும் நிலையில், அவர் சீரியலில் இருந்து திடீரென விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பல சுவாரஸ்யமான கதையுடன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ தொடங்குவார்களா என ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து உள்ள நிலையில், ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல கதை கொண்டு செல்லப்படுகிறது. இதுவரை பாரதி, கண்ணம்மாவை பிரிக்க வெண்பா பல சதி வேலைகளை செய்து வருவார். ஆனால் அவருக்கே ஆப்பு வைக்க அவருடைய அம்மா ஷர்மிளா வந்திருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஷர்மிளாவின் கண்டிஷன் படி வெண்பா பாரதியை மறந்து திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல அதனால் என்ன நடக்க இருக்கிறது என்பது எல்லாம் இனி வரப்போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன், அஞ்சலியாக நடித்த கண்மணி, கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி என பலர் அடுத்தடுத்து மாறி இருக்கின்றனர்.

மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – அதிரடி அறிவிப்பு!

அந்த வரிசையில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அருண் பாரதி கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது அவர் விலகுவதாக வந்த செய்தியால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். அவருக்கு பதிலாக திருமதி செல்வம் சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!