புது கண்ணம்மாவுடன் நடனமாடி கொண்டாடிய பாரதி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
புது கண்ணம்மாவுடன் நடனமாடி கொண்டாடிய பாரதி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
புது கண்ணம்மாவுடன் நடனமாடி கொண்டாடிய பாரதி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
புது கண்ணம்மாவுடன் நடனமாடி கொண்டாடிய பாரதி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் எதிரும், புதிருமாக சண்டையிட்டு வரும் பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த தொடரில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் என தனித்தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் அவரது நடிப்புக்கு மாத்திரம் அல்ல அவரது செயலுக்கும் பிரபலம் தான்.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியா பிரின்ஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

ஏனென்றால் எப்போதும் துறுதுறுவென ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் அருண் பிரசாத் தன்னை சுற்றி இருப்பவர்களை உற்சாகமாக வைத்திருப்பார். இதற்காக அவர் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் வீட்டில் நடைபெற்ற ஒரு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் அருண் பிரசாத், வழக்கம் போல ஆடிப்பாடி உற்சாகத்துடன் காணப்பட்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பாவ்னி? ரசிகர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் பிறந்தநாள் விழாவின் போது நடிகர் அருண் பிரசாத் செய்திருந்த சேட்டைகள் எல்லாம் வலைதளங்களில் வீடியோக்களாக வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வந்தது. இந்த வரிசையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்து விழாவை சிறப்பித்த அருணின் வீடியோ காட்சிகள் மீண்டுமாக வைரலாகி வருகிறது. அதுவும் குறிப்பாக, இந்த வீடியோவில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் நடிகை வினுஷாவுடன் சேர்ந்து நடிகர் அருண் பிரசாத் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here