‘பாரதி கண்ணம்மா’ மாமியாருடன் சூப்பர் போட்டோஷூட் நடத்திய கண்ணம்மா – வைரல் புகைப்படங்கள்!

0
'பாரதி கண்ணம்மா' மாமியாருடன் சூப்பர் போட்டோஷூட் நடத்திய கண்ணம்மா - வைரல் புகைப்படங்கள்!
'பாரதி கண்ணம்மா' மாமியாருடன் சூப்பர் போட்டோஷூட் நடத்திய கண்ணம்மா - வைரல் புகைப்படங்கள்!
‘பாரதி கண்ணம்மா’ மாமியாருடன் சூப்பர் போட்டோஷூட் நடத்திய கண்ணம்மா – வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது மிகவும் ஹிட் ஆக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா மற்றும் சௌந்தர்யாவாக நடிக்கும் ரூபஸ்ரீ இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

போட்டோஷூட்:

விஜய் டிவியின் சீரியல்கள் என்றால் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் மொத்த சின்னத்திரையிலும் உள்ள சீரியல்களில் நம்பர் 1ரேட்டிங்கை தொடர்ந்து பெற்று ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட் தொடராக இருப்பது பாரதி கண்ணம்மா தொடர். தற்போது கடந்த மாதம் முதல் பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்தது. கண்ணம்மா, பாரதி இடையிலான சண்டைகள் மீண்டும் ஆரம்பம், வெண்பாவின் சிறைபயணம், லக்ஷ்மியின் அப்பா ஆசை, அஞ்சலியின் பிரசவம், வெண்பா அஞ்சலிக்கு மாத்திரையை தவறாக கொடுத்தது பாரதி அறிந்து கொண்டது, பாரதி, கண்ணம்மா விவாகரத்து என்று பல முக்கிய விஷயங்களையும் தொடர்ச்சியாக கொண்டுவந்தனர்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினியின் புதிய திரைப்பட படப்பிடிப்பு – வைரலாகும் வீடியோ!

இதனால் மிகவும் பரபரப்பாக தொடர் சென்று வந்தது. ரசிகர்கள் ரோஷினியை மிஸ் செய்தாலும், கதையின் விறுவிறுப்பில் மாற்றத்தை பற்றி மறந்து விட்டார்கள் என்றும், சொல்லப்போனால் வினுஷாவை கண்ணம்மாவாக ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டார்கள் என்றும் தான் சொல்ல வேண்டும். வினுஷாவும் கதையில் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் கண்ணம்மாவாக பதிய தொடங்கி விட்டார்.இந்நிலையில் தற்போது கண்ணம்மாவும், பாரதியும் நெருக்கமாக வரும் காட்சிகள் வருவதால் ஒரு பக்கம் ரசிகர்கள் நல்ல வேளை சேர்ந்து விட்டார்கள் என்றும்.

‘பிக்பாஸ்’ சஞ்சீவ் முன்னணி நடிகையின் தம்பியா? இணையத்தில் வைரலாகும் தகவல்! ரசிகர்கள் ஷாக்!

மறுபக்கம், சீரியலில் இதெல்லாம் ஓவர் என்றும் கூறி வருகின்றனர். தற்போது ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் சமூக வலைதளத்தில் கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷாவும்,சௌந்தர்யாவாக நடிக்கும் ரூபஸ்ரீயும் சேர்ந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். புதிதாக வந்துள்ளார் என்ற தயக்கம் இல்லாமல் வினுஷாவுடன் அனைவரும் சகஜமாக பழகி வருவது இதன் மூலம் அறிய முடிகிறது. விதவிதமாக இருவரும் சேர்ந்து பல போட்டோக்களை எடுத்துள்ளனர். இந்த போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!