ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா? வெளியான புகைப்படம்!

0
ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா? வெளியான புகைப்படம்!
ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா? வெளியான புகைப்படம்!
ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியலான பாரதி கண்ணம்மாவில், தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் கண்ணம்மாவும், ஹேமாவும் லட்சுமியுடன் இணைந்திருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. கொரோனா காரணமாக படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகாமல் உள்ளதால் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் சுமார் இரண்டரை மணி திரைப்படத்தில் இருக்கும் சுவாரஸ்யத்தை விட நாள்தோறும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் சீரியல் எப்சோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு, அதில் டாப் வரிசையில் உள்ளது பாரதி கண்ணம்மா சீரியலாகும்.

பாரதி கண்ணம்மா பரினாவின் ‘நம்ம வீட்டு வளைகாப்பு’ நிகழ்ச்சி – வாழ்த்த வந்த சீரியல் பிரபலங்கள்!

தொடக்கத்தில் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு இல்லாத இந்த சீரியல் போகப்போக ரசிகர்களின் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாக ஆகிவிட்டது. அதனால் தொடர்ந்து TRP யில் முதலிடத்தில் உள்ளது. தற்போது வராந்தோறும் சீரியலில் அடுத்தடுத்து பல ட்விட்ஸ்ட்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த வாரம் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற உண்மை தெரிந்துள்ளது. ஆனால் இது பற்றி இன்னும் சௌந்தர்யாவிடம் கண்ணம்மா பேசவில்லை.

முதல்முறையாக காதலருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஜீ தமிழ் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் அவருக்கு ஹேமா தான் இரண்டாவது மகளாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தற்போது வெண்பாவிற்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என அஞ்சலி சொல்லிவிட்டார். கண்ணம்மா ஹேமாவை வெண்பாவிற்கும் பாரதிக்கும் பிறந்த குழந்தை என நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த உண்மை தெரிந்ததால் ஹேமா தான் அவரின் மகள் என்ற உண்மை தெரிந்துவிடும். இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஹேமாவும் லட்சுமியும் ஒரே ட்ரெஸில் கண்ணம்மா உடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அந்த அழகிய போட்டோ வெளியாக கண்ணம்மாவிற்கு தனக்கு இரண்டு குழந்தைகள் என்பதை அறிந்து அவர்களுடன் சேர்ந்து இருக்கிறாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!