வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி? வித்தியாசமான திருப்பங்களுடன் கதைக்களம்!

8
வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி? வித்தியாசமான திருப்பங்களுடன் கதைக்களம்!
வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி? வித்தியாசமான திருப்பங்களுடன் கதைக்களம்!
வெண்பாவை திருமணம் செய்ய திட்டமிடும் பாரதி? வித்தியாசமான திருப்பங்களுடன் கதைக்களம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இனி அடுத்து வெண்பா மற்றும் பாரதி இருவரது திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நடிகை பரினா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் செய்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ‘பாரதி கண்ணம்மா’. இதில் ஆரம்பத்தில் இருந்தே பல ட்விஸ்டுகள் இருந்த வண்ணம் இருக்கிறது. கதாநாயகி கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் கதாநாயகன் பாரதி. இருவரது திருமணத்தினையும் முதலில் ஏற்று கொள்ளாத குடும்பத்தினர் நாளடைவில் கண்ணம்மாவின் குணம் அறிந்து ஏற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில், கண்ணம்மா கர்ப்பமானதும் அவரை சந்தேகப்படுகிறார் பாரதி. இதனை அறிந்து கொந்தளிக்கும் கண்ணம்மா அவரை விட்டு தனியே வாழ்கிறார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றது.

வெண்பாவிடம் இரட்டை குழந்தை பற்றி கேட்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த எபிசோட்!

அதில் ஒரு குழந்தை பாரதியிடமும், மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கிறது. இந்த உண்மை பாரதி அம்மா சௌந்தர்யா மற்றும் அப்பா வேணுவிற்கு மட்டுமே தெரியும். இது ஒரு புறம் இருந்தாலும், கண்ணம்மா பற்றி பாரதி மனதில் தப்பான எண்ணத்தினை ஆரம்பத்தில் இருந்து அவரது தோழி வெண்பா விதைத்து வருகிறார். இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர முடியாமல் இருக்கிறது. தற்போது இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கின்றனர். இதில் வெண்பா குளிர் காய்ந்து வருகிறார்.

இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா, பாரதியிடம் உதவி கேட்கும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!

பாரதியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் வெண்பா மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார். பாரதியும் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பாரதியும், கண்ணம்மாவிடம் தற்போது வெண்பா என் மனைவியாக இல்லாமல் இருக்கலாம் என்றும் நான் விருப்பப்பட்டால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறுகிறார். இது இப்படியாக இருக்க, வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அதில் மணப்பெண் கோலத்தில் இருக்கிறார். இதனால் பாரதி மீண்டும் மனம் மாறி வெண்பாவை திருமணம் செய்வது போல கதைக்களம் அமையுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

 1. பாரதி கண்ணம்மா சீரியல் சமீப காலமாக பார்க்கிறேன். இயக்குனர் மக்களை முட்டாள்களாக்கி கதையை எவ்வளவுக்கெவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்துக்கொண்டு செல்கிறார். தற்போதுள்ள கதையில் நாயகி தன்னுடைய இன்னொரு மகளை தேடி முட்டாள்தனமாக திரிகிறார். முதன்முதலில் இரட்டை குழந்தை பற்றி கூறிய மருத்துவர் மூலமாக பிரசவம் நடந்த மருத்துவமனையில் ரெகார்டை பார்த்தால் புரியும். வெண்பாவின் கிரிமினல் மூளைக்கே ஐடியா கொடுக்கும் அளவுக்கு அவளுடைய வேலைக்காரிக்கு இருக்கும் அறிவு யாருக்குமே இயக்குனருக்கே இல்லை போலும்.

 2. பிச்சுப்புடுவேன் வெண்பாவை

  மாதருள் மாணிக்கம் என் அருமை தங்கை கண்ணம்மாவை என் அருமை பாரதியுடன் சேர்ந்து வாழ வையுங்கள்

  – V. Sukhavana Vidhya

 3. என் அருமை தங்கை கண்ணம்மா

  இந்த அன்புள்ள அண்ணா எழுதிக் கொள்வது
  இன்று (1.10.21) தாங்கள் பாரதி மாமாவிடம் வெண்பா செய்த குற்றங்களை கூறும்போது வெண்பா இரண்டு நாட்களுக்கு முன் தங்களை மிரட்டி அனுப்பிய voice மெஸ்சேஜை தாங்கள் பாரதி மாமாவிடம் போட்டுக் காட்டி வெண்பாவின் முகத் திரையை கிழித்திருக்கலாமே !

  Even now it is not too late. Please show the venba’s voice message to your lovely Bharathi Mama

  – V. Sukhavana Vidhya

  • தயவு செய்து இந்த மாதிரி serial சீக்கிரம் முடிக்கவும் டைரக்டர்க்கு இனி முடிக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை. அவருக்கு கதை முடிக்க தெரியாமல் முழி pidungi என்ன பண்ணுவது எப்படி எல்லாரையும் பைத்தியக்காரன் akkuvadhu என்று நினைக்கிறார் . இன்னும் கூட பத்து வருடம் இந்த khadayai ottuvar அற்புதமான director.

 4. சுத்த முட்டாள்களை இந்த சீரியலிலதான் காணமுடியும்

 5. மக்களை முட்டாளாக்குவது ஒரு பக்கம் இருந்தாலும் , கண்ணம்மா வை இனியாவது ஹாஸ்பிடல் ரெக்கார்டு பார்த்து திட்டவட்டமாக தனக்கு இரட்டை க்குழந்தைகள் பிறந்ததை தெரிந்து கொள்ள வதாகத்திருப்பம் வைத்தால் மக்களுக்குப் பாடமாக அமையும்.

 6. திரைப்படம், டீ. வி. சீரியல், ஆகியனவற்றில் கண்டிப்பாக லாஜிக் பார்க்க தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!