பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் வேணு – நெஞ்சு வலியுடன் வைக்கும் நிபந்தனை!

0
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் வேணு - நெஞ்சு வலியுடன் வைக்கும் நிபந்தனை!
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் வேணு - நெஞ்சு வலியுடன் வைக்கும் நிபந்தனை!
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க திட்டமிடும் வேணு – நெஞ்சு வலியுடன் வைக்கும் நிபந்தனை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், வேணுவுக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தனது உயிர் போகும் முன் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ சொல்லி சத்தியம் செய்ய சொல்லுவதாக அதிரடியான ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதையின் படி, தனது 2 ஆவது குழந்தையை கண்டுபிடிக்கும் தேடலில் கண்ணம்மா ஈடுபட்டு வருகிறார். இதை அறிந்து கொண்ட வெண்பா, அந்த குழந்தை பற்றிய உண்மை நிலவரம் தனக்கு தெரியும் என கண்ணம்மாவை ஏமாற்றி வருகிறார்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இறுதி முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இது தவிர கண்ணம்மா பாரதியை விவாகரத்து செய்தால் தான் அந்த குழந்தை பற்றிய உண்மையை கூறுவேன் எனவும் மிரட்டல் விடுகிறார் வெண்பா. இப்படியே போனால் கண்ணம்மா, பாரதியுடன் இணைவது சந்தேகம் தான் என ரசிகர்கள் கணித்திருந்த நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில அதிரடியான சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது. அதாவது பாரதியையும், கண்ணம்மாவையும் நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேணுவுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

இதை கண்டு பதைத்த குடும்பம் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறது. அங்கு வேணுவை பார்க்க பாரதி வருகிறார். அப்போது நான் கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என வேணு சொல்ல, சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்து நடந்ததை கூறுகிறார். இந்த விஷயத்தை கேட்டதும் கண்ணம்மா பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்.

ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மையை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அங்கு, படுக்கையில் இருக்கும் வேணு, என் வாழ்க்கை முடியப்போது, அதனால் நான் இறந்து போவதற்கு முன் எனக்கு நீங்க சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என பாரதி மற்றும் கண்ணம்மாவிடம் நிபந்தனை வைக்கிறார். அதாவது, பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி விட்டு சத்தியம் செய்ய சொல்கிறார். இதை கேட்ட பாரதியும், கண்ணம்மாவும் அதிர்ந்து நிற்கின்றனர். இதனுடன் அந்த ப்ரோமோ முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here