‘பாரதி கண்ணம்மா’ சீரியல் லட்சுமியின் சினிமா டூ சீரியல் பயணம் – ரக்சாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் லட்சுமியின் சினிமா டூ சீரியல் பயணம் - ரக்சாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'பாரதி கண்ணம்மா' சீரியல் லட்சுமியின் சினிமா டூ சீரியல் பயணம் - ரக்சாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் லட்சுமியின் சினிமா டூ சீரியல் பயணம் – ரக்சாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பல ரசிகர் பட்டாளத்தை கொண்ட ரக்சாவின் சினிமா பயணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரக்சா:

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் பிரபலமடைந்து இருக்கின்றனர். குறிப்பாக 8 வருடத்திற்கு பிறகு என கதை நகர்ந்த பிறகு பாரதி – கண்ணம்மா மகளாக சவுந்தர்ய லட்சுமியாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ரக்சா பல ரசிகர்களை கொண்டுள்ளார். அதற்கு காரணம் அவரின் எதார்த்தமான நடிப்பு தான் அதுமட்டுமில்லாமல் உண்மையாகவே அவர் பாட்டி சௌந்தர்யா போலவே இருக்கிறார். இவருடைய தந்தை சீரியல் நடிகரான ஷியாம், அவருடைய இரண்டாவது மகள் தான் ரக்சா.

முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்? ஒன்றாக இணையும் அண்ணன், தம்பிகள்!

ஷியாம் கோலங்கள் மற்றும் தென்றல் போன்ற பல வெற்றி சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். ரக்சாவின் அக்காவான நிவாஷினி சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பூஜா என்ற பெயரில் நடித்து இருந்தார். இத்தொடரில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தற்போது செந்தூரப்பூவே சீரியலில் கனி ரோலில் நடித்து வருகிறார். ரக்சா முதன்முதலில் வெள்ளித்திரை படம் ஒன்றில் தான் நடிக்கத் தொடங்கினார். இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி இவர் தான்.

மல்லிகாவால் தனத்திற்கு வரப்போகும் ஆபத்து – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!!

இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை கீர்த்தி சுரேஷ் ரக்சாவுடன் செம்ம ஜாலியாக இருப்பார். எப்போதுமே ரக்சாவை ஆசையாக தூக்கி கொஞ்சுவாராம். அவர் மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனும் பாசத்துடன் பார்த்து கொள்வாராம். மேலும் இந்த வாய்ப்பு அவரது அக்கா மூலமாக தான் கிடைத்துள்ளது. இவர் சீரியல் டப்பிங்குக்காக ஸ்டூடியோ சென்ற போது அவருடன் ரக்சாவும் இருந்துள்ளார். அப்போது தான் விஜய் டிவி எடிட்டர், ரெமோ பட இயக்குனரிடம் ரக்சாவை பற்றி கூறி ஆடிஷனில் கலந்து கொள்ள வைத்தார். ஆடிஷனில் சிவாவுடன் சேர்ந்து நடித்தவர் உடனே செலக்ட் ஆகி விட்டார். இப்போது பாரதி கண்ணம்மாவில் லட்சுமியாக நடிப்பில் கலக்கி வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!