கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, ரசிகர்கள் உற்சாகம் – வெளியான புகைப்படம்!

0
கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, ரசிகர்கள் உற்சாகம் - வெளியான புகைப்படம்!
கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, ரசிகர்கள் உற்சாகம் - வெளியான புகைப்படம்!
கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, ரசிகர்கள் உற்சாகம் – வெளியான புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மா சீரியலில், பல்வேறு உண்மைகள் தற்போது வெளியான நிலையில், பாரதி மனம் திருந்துவது போல தற்போது காட்டப்படுகிறது. இந்நிலையில் கண்ணம்மாவும், பாரதியும் மீண்டும் சேர்ந்துள்ளது போல புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது. அதனால் இந்த சீரியல் முடிய போகிறது என தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மை வெளிவந்துள்ளது. ஆனால் அந்த இரண்டாவது குழந்தை யார் என்று கண்ணம்மா குழப்பத்தில் இருக்கிறார். மேலும் ஹேமா தான் தன்னுடைய குழந்தை என கண்ணம்மா சந்தேகத்தில் இருக்கிறார்.

கண்ணம்மாவாக நடிப்பது கஷ்டம், மனம் திறந்த அஞ்சலி – சுவாரசிய பேட்டி!

இந்நிலையில், கண்ணம்மா வெண்பாவிற்கும், பாரதிக்கும் கல்யாணம் ஆனதாக நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மை இல்லை என அஞ்சலி வளைகாப்பில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் திடீரென பாரதி மனம் திருந்தி உள்ளார். இது பற்றி வருத்தப்பட்டு வெண்பாவிடம் சொல்ல, வெண்பா பாரதியை வெறுப்பேத்துவது போல பேசி அவரது மனதை மாற்றுகிறார். ஆனால் பாரதி, கண்ணம்மா தப்பு செய்திருக்க மாட்டாளோ என்ற எண்ணத்தில் தெளிவாக இருக்கிறார்.

மொட்டை அடித்து அம்மாவிற்கு இறுதி சடங்குகள் செய்யும் கண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!

அது பற்றி குடும்பத்தினரிடமும் பேசி விடுகிறார். இதனால் குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள். பாரதி மீதமிருக்கும் நாட்களை கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைப்பதாக சொல்கிறார். இந்நிலையில் பாரதியும், கண்ணம்மாவும் மீண்டும் சேர போகிறார்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். தற்போது பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் வரப்போகும் எபிசோட் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!