வெண்பாவுடன் சேர்ந்த கண்ணம்மா, சீரியலில் புதிய திருப்பம் – ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு புகைப்படம்!

0
வெண்பாவுடன் சேர்ந்த கண்ணம்மா, சீரியலில் புதிய திருப்பம் - 'பாரதி கண்ணம்மா' படப்பிடிப்பு புகைப்படம்!
வெண்பாவுடன் சேர்ந்த கண்ணம்மா, சீரியலில் புதிய திருப்பம் - 'பாரதி கண்ணம்மா' படப்பிடிப்பு புகைப்படம்!
வெண்பாவுடன் சேர்ந்த கண்ணம்மா, சீரியலில் புதிய திருப்பம் – ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு புகைப்படம்!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பரினா, ரோஷினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைதளத்தில் பதிவிட கண்ணம்மாவுடன் வெண்பா இணைந்திருப்பதை கண்டவுடன் சீரியலில் புதிய ட்விஸ்ட் இருப்பதாக கணித்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு முக்கிய சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ இருந்து வருகிறது. வழக்கமான சீரியல் பாணியை முறியடித்து வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தற்போது ஒரு முக்கியமான தருணத்துக்கு வந்துள்ளது. அந்த வகையில் 8 ஆண்டுகளாக பிரிந்திருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இணையும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்சத்தில், புதிய குழப்பமாக விவாகரத்து சம்பவங்கள் வந்து நிற்கிறது.

விவாகரத்திற்கு பின் ஜூனியர் NTR உடன் இணையும் சமந்தா – டிவி ஷோவில் தசரா ஸ்பெஷல்!

பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக முயற்சித்து கொண்டிருக்கும் வெண்பாவின் வில்லத்தனத்துக்கு தீனி போடும் விதமாக தான் இந்த விவாகரத்து காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து பிரிக்க போராடி வரும் வெண்பா, இந்த விவாகரத்து திட்டங்களை அரங்கேற்றி வருகிறார். மறுபக்கத்தில் பாரதியும் அதே யோசனையில் இருக்க இந்த காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ராதிகாவின் கர்ப்பகால புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் எதிரும் புதிருமாக, முட்டி மோதிக் கொண்டிருக்கும் கண்ணம்மா மற்றும் வெண்பா அதாவது பரினா மற்றும் ரோஷினி நிஜத்தில் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். சீரியல் படப்பிடிப்பில் அவ்வப்போது சந்திக்கும் ரோஷினி மற்றும் பரினா இருவரும் இணைந்து எடுத்துள்ள சமீபத்திய புகைப்படத்தை, நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படி சீரியல்களில் அடிதடி காட்சிகளில் இருவரையும் பார்த்து வந்த ரசிகர்கள் இப்போது இருவரையும் ஒன்றாக சிரித்தபடி பார்க்கும் போது சீரியலில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் இருக்குமோ என எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!